India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.15) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு 100 அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டிஎஸ்பி சுதிர்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் அருகே சேரான் கோட்டை & தெற்கு கரைய பகுதியில் உள்ள இரு பிரிவினரை சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு மதுபோதையில் மீண்டும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். அப்போது ஒரு பிரிவை சேர்ந்த கும்பல் நண்டு வலைக்கு பயன்படும் கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதில் நம்பு குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலைக்கு காரணமான 7 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2024 டிச.8 ல் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர் 8 பேரின் வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர் 6 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார். படகோட்டிகள் இருவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம், 9 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இவர்கள் 6 பேரும் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
வாரம் மும்முறை பராமரிப்பு பணிக்காக மண்டப – மதுரை இயங்கிய கன்னியாகுமரி – ராமேஸ்வரம் – திருப்பதி ரயில் பெட்டிகள் இனி ராமேஸ்வரம் பணி மனைக்கு மாற்றப்படுகிறது. இதனால் மண்டபம் – மதுரை இடையே திங்கள், வெள்ளி கிழமைகளில் இயங்கிய முன் பதிலில்லா சிறப்பு ரயில் (வ.எண் :06780) ஜன.17 முதல் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட போக்குவரத்து பிரிவு செய்தி குறிப்பில் இன்று தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ரூ.4.44 கோடியில் தொழிலாளா் துறை ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, நிகழ்ச்சியில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா். எம்.பி கே.நவாஸ்கனி, MLA காதா்பாட்சா முத்துராமலிங்கம், தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன,13) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மற்றும் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அவசர உதவிக்கு எண் 100 அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் கூட வழங்காத தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என இராமநாதபுரம் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது.அது பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் பேருந்து நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடல் வளம், மீன் வளத்தை அழிக்கும் இரட்டை மடி,சுருக்கு மடியில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்த நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் சிலர் விசைப்படகு, நாட்டுப்படகில் தடை செய்யப்பட்ட இந்த வலைகளில் மீன் பிடிக்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ஆண்டுதோறும் ஜன முதல் இரட்டை மடியில் மீன் பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.அதன்படி கனரக விசைப்படகில் இரட்டை மடியை ஏற்றி மீன்பிடிக்க ஆயத்தமாகின்றனர்
ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சரவணன் என்பவர் தமது அதிகாரத்தில் முகாம் அலுவலக எழுத்தர் தலையிடுவதாக கூறி உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் எனது காவல் பணியை திறம்பட செயல்பட முடியாததால் பணியாற்ற விருப்பம் இல்லை என கூறி அனுப்பிய கடிதம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்று நேற்று அதிகாலை கரை திரும்பிய இலங்கை கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு கடற் பகுதியில் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் 8 பேரை கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர் 8 பேரையும் ஜன. 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.