India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.20) இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டிஎஸ்பி சாந்த மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவசர உதவிக்கு 100 ஐ அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நகர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும், பாம்பன் புதிய ரயில் பாலத்தை விரைவில் திறக்க வலியுறுத்தியும் வருகிற (ஜன.28) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த 15 வயது மாணவி . ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளி செல்ல வேண்டிய அவர் பள்ளிக்கு செல்ல முடியாது என கூறினார். இதனால், மாணவியை அவரது தாயார் கண்டித்ததால், மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (49). இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41) இவருக்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்திகுமார் பிஜியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது லட்சுமணனுக்கு தெரியவர, ஈஸ்வரி லட்சுமணனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இது தெரிந்த லட்சுமணன் எஸ்.பி.யிடம் புகார் அளித்ததையடுத்து கோட்டை ஈஸ்வரி, கெளதம், பிரதீபன் ஆகியோரை கைது செய்து பிஜியை தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான பெய்த மழை அளவு விவரத்தினை ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மண்டபம் 87 மி.மீ மழை அடுத்தபடியாக ராமேஸ்வரத்தில் 80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மொத்த சராசரியாக மாவட்டத்தில் 46 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரத்தில் நேற்று தொடங்கிய மழை இன்னும் ஓயவில்லை. இன்றும் காலையும் மழை பெய்தது. அடுத்து வரும் மணி நேரங்களிலும் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், வாலிநோக்கம், கீழக்கரை, சாயல்குடி, கடலாடி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. (கனமழை பகுதியில் உள்ள மக்களுக்கு பகிரவும்)
மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இன்று (ஜன.19) இரவு 10 மணியளவில் மண்டபத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இராமநாதபுரம், பரமக்குடி ,மானாமதுரை, சிவகங்கை, கல்லல் ,காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி தஞ்சை ,கும்பகோணம்,மயிலாடுதுறை,சீர்காழி,சிதம்பரம்,கடலூர், பண்ருட்டி, விழுப்புரம் ,திண்டிவனம் ,மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு ,தாம்பரம்,மாம்பழம் வழியாக எழும்பூர் சென்றடையும்.
பழைய பாம்பன் ரயில் பாலம் உப்புக்காற்றில் துருப்பிடிப்பதை தடுக்க அலுமினிய பெயிண்ட் பூசாமலும் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பின்றியும் உள்ளதால் தினமும் வீசும் உப்பு காற்றில் தூக்கு பாலத்தின் இரும்பு தூண்கள் துருபிடித்து எலும்பு கூடாக மாறியுள்ளது. ராமேஸ்வரத்தின் அடையாளச்ச சின்னமாக விளங்கும் 111 வயதான இந்த பாலத்தை வரலாற்று நினைவுச் சின்னமாகவும் பாதுகாத்து பராமரிக்க சமூக ஆர்வலர்கள கோரிக்கை விடுத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.18) இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு 100 ஐ அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வாலிநோக்கம், முந்தல், மாரியூர், நரிப்பையூர், ரோஸ்மா நகர் உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடற்கரை கிராமங்களில் ஆழ்கடல் பகுதிகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மணிச்சிங்கி. கிளிச்சிங்கி. தாளிச்சிங்கி இறால்கள் ரூ.2000 முதல் ரூ.5000 வரை எடைக்கேற்ப விற்பனையாவதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் சுவை மிக்க இந்த வகை மீன்களுக்கு வெளிநாடுகளில் மவுஸ் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.