India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. அதுவும் 172 % இராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக மழை பெய்துள்ளது.ஜனவரி மாதத்தில் மாவட்டத்தில் பெய்யும் இயல்பான மழை அளவு 24.4 மில்லி மீட்டர் ஆகும். மாவட்டத்தில் பதிவான சராசரியான மழை அளவு 66.3 மில்லி மீட்டர் ஆகும்.
நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி நேற்று(ஜன.23) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று (ஜன.24) சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
முதுகுளத்தூர் செல்லியம்மன் கோயில் அருகே இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளி என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் பாராட்டு சான்றிதழ் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப் சிங், தாசில்தார் சடையாண்டி, ஆணையாளர் லட்சுமி ஜானகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். *ஷேர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், 21 வயது வாலிபர் தவறாக நடந்ததாக மண்டபம் போலீசிற்கு குழந்தைகள் நல அலுவலர் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மண்டபம் பொங்காளி தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அபுர் நசீர் (21) என்பவரிடம் குழந்தைகள் நல அலுவலர் ராமேஸ்வரம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி பிருந்தா தேசிய அளவில் வீர் கதா போட்டியில் வென்றுள்ளார். இதனை ஒட்டி அவர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாணவியை முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு பரிசு வழங்கி பாராட்டினார். உடன் தலைமை ஆசிரியர் யுனைசி, வழிகாட்டி ஆசிரியர் வளர்மதி ஆகியோர் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ராம்நாடு கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 8 ஆண்டுகளாக கட்சியின் உறுப்பினராகவும் கிழக்கு மாவட்ட தலைவராகவும் பணியாற்றினேன். சமீப காலமாக கசப்பான சூழ்நிலை காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் ராட்சத மரக்கட்டை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக புலனாய்வு பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்ததில் சுமார் 74 அடி நீளமும், 6 அடி விட்டமும் கொண்ட அளவில் இருந்துள்ளது. மேலும், அந்த மரக் கட்டை ‘பதாக்’ எனப்படும் மர வகையினை சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது. சரக்கு கப்பலில் இருந்து விழுந்ததா என விசாரணை செய்கின்றனர்.
தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் வனத்துறை மூலம் ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டுவரும் மையத்தை பார்வையிட்டு ஆமைகள் பராமரிப்பு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-25 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கேட்டறிந்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் முஹமது ஷா நாவாஸ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எழிலரசன், சந்திரன் சேகர் ஆகியோர் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பணிபுரியும் பொறியாளர் பாரதி கண்ணன் தனது வாடிக்கையாளர்களுக்கு பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டுமனைகளுக்கு நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெறுவதற்கு டவுன் பிளானிங் அலுவலர் பர்குணனை அணுகிய போது 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இன்று (ஜன.23) பாரதி கண்ணன் பர்குணனுக்கு GPay மூலம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அனுப்பிய பொழுது லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
இன்று (ஜன. 22) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.