Ramanathapuram

News January 31, 2025

ராமேஸ்வரத்தில் இன்று ரயில் பெட்டிகள் பராமரிப்பு

image

பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக சென்னை, திருப்பதி, கன்னியாகுமரி, கோவை, மதுரை, திருச்சி (ம) வெளி மாநிலங்களுக்கு மண்டபத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் திருப்பதி, குமரி ரயில் பெட்டிகள் ராமேஸ்வரத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு மீண்டும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என தெ.ரயில்வே அறிவிப்பு. *ஷேர்

News January 31, 2025

மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, சம்பவத்தன்று தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அக்காள் கணவர் ஆனந்த்(40), சிறுமியை பாலியல் வன்மை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்தை கைது செய்தனர்.

News January 30, 2025

ராமநாதபுரத்தில் 3 காவலர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு

image

தமிழகத்தில் 83 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் ராமநாதபுரத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள் குணசேகரன், சண்முகம், பாஸ்கரன் ஆகியோர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்களுக்கு சக காவலர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News January 30, 2025

ரூ.5 லட்சம் மோசடி பணம் மீட்பு

image

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியை சேர்ந்த வேணுபாரதி(30) வீட்டில் இருந்த படியே அகர்பத்தி தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என யூடியூப்பில் விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு கொண்டு அகர்பத்தி இயந்திரம் வாங்க ரூ.5 லட்சம் செலுத்தியுள்ளார். அதற்குப்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். போலீசார் 1 மாதத்திற்குள் பணத்தை மீட்டு வங்கி கணக்கில் வரவு வைத்தனர்.

News January 30, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.30) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 30, 2025

கச்சத்தீவு செல்ல பக்தர்களுக்கு விண்ணப்பம் விநியோகம்

image

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆடித்திருவிழாவானது மார்ச்.14,15ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை, இந்தியா இருநாட்டு மக்களும் கலந்து கொள்ளும் திருவிழாவாகும். இதற்கு இந்திய பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ள நிலையில் கச்சத்தீவு செல்ல விருப்பமுள்ளவர்களுக்கு பிப்.6 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என வேர்க்கோடு பங்குதந்தை கூறியுள்ளார். *ஷேர்

News January 30, 2025

பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் பணி மும்முரம்

image

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ராமநாதபுரத்தில் கடந்த 2016 – 2020-ஆம் ஆண்டுகள் வரை 13,718 வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டன. இவற்றில் 12,535 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. (நிலுவையில் 1,183 – முழு தவணைத் தொகை வழங்கப்பட்டும்), 784 பயனாளிகள் வீடுகளைக் கட்டவில்லை. இந்நிலையில், 11 ஒன்றியங்களில் வீடுகள் கட்ட பணம் பெற்றவா்களிடம் இதை திரும்ப வசூல் செய்யும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News January 29, 2025

கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்

image

இராமநாதபுரம் மாவட்டம் சின்னகடை நாகநாதபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்.02ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜன.29) மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் 15வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை கோவில் நிர்வாகத்திடம் நன்கொடை வழங்கினார். கோவில் கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர் நன்கொடை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 29, 2025

கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: மண்டபம், திருப்புல்லாணி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோயில், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய 11 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் 1.2.2025 – 14.2.2025 வரை கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்பு துறையினரால் நடக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார். *ஷேர்

News January 29, 2025

ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் மாற்றம்!

image

ஒவ்வொரு ஆண்டும் தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் வருவர். இந்நிலையில் நாளை(ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு, கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு பின் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்

error: Content is protected !!