Ramanathapuram

News February 5, 2025

நிலத்தடி நீரை மேம்படுத்த நவாஸ்கனி பேச்சு

image

நாடாளுமன்ற மக்களவையில் விதி 377ன் கீழ் இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி பேசுகையில்: இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்கள், நகரங்கள், தெருக்களிலும் ரீசார்ஜ் போர்வெல் உருவாக்கி அதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தி குடிப்பதற்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த சிறப்பு திட்டத்தினை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டுமென உரை நிகழ்த்தினார்.

News February 5, 2025

சக்கரக்கோட்டை,தேர்த்தங்கல்ராம்சார் சரணாலயங்கள் தேர்வு

image

தமிழக அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை,தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இதன் , மூலம் தமிழ்நாடு 20 ராம்சார் தளங்களுடன் இந்தியாவில் முதல்மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.இதனை , செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சார்பில் வெளியிடபட்டுள்ளது.

News February 5, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (பிப். 04) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 4, 2025

இராமநாதபுரத்தில் வெப்பநிலை உயர்வு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 10 நாட்களுக்கு வறண்ட வானிலையுடன் வெப்பம் உயர்ந்து காணப்படும். இரவு, அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்துடன் காணப்படும். நாளை மட்டும் சற்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.
மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இயல்பான வெப்பநிலையும் பரமக்குடி கமுதி பார்த்திபனூர் முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

News February 4, 2025

அமைச்சர் ஆர்.எஸ்‌. ராஜகண்ணப்பன் பயண நிரல்

image

தமிழ்நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்‌. ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் ஆட்சியர் கூட்ட அரங்கில் பிப்.5, அன்று நடைபெறும் சமூக நலன், மகளிர் உரிமை தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

News February 4, 2025

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி மாற்றம் 

image

திருவாடானை யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமுருகன் பதவி உயர்வு பெற்று மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மண்டபம் பி.டி.ஒ. நடராஜன் கலெக்டர் அலுவலகத்திற்க்கும்,போகலூர் பி.டி.ஒ. முத்துராமலிங்கம் கமுதி யூனியனுக்கும், போகலூர் பி.டி.ஒ.(வ.ஊ )திருநாவுக்கரசு. போகலூர் கிராம ஊராட்சி.பி.டி.ஒ.வாகவும் பணி மாறுதல் செய்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

News February 4, 2025

தலைக்கவசம் அணியாவிடில் நடவடிக்கை –  எஸ்பி 

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் தங்கள் குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

News February 4, 2025

புரோட்டா கடைகளில் ஆய்வு

image

பரமக்குடியில் உணவு பாதுகாப்பு துறையினர் 15க்கும் மேற்பட்ட புரோட்டா கடைகள் மற்றும் உணவகங்களில் நேற்று (பிப்.3) திடீரென ஆய்வு செய்தனர். ஆய்வில் சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த உணவகங்கள், புரோட்டா கடைகளுக்கு தலா ரூ.1000, ரூ.2000 வீதம் அபராதம் விதித்தனர். சுவைக்காக அஜினா மோட்டோ சேர்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் கடைகளில் இருந்து உணவு மாதிரிகளை பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News February 3, 2025

மணக்கோலத்தில் மணப்பெண்.. Escape ஆன மணமகன் வீட்டார்  

image

பரமக்குடி அருகே அலங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் மேலபெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த குஷியாகாந்தி என்பவருக்கும் மேலபெருங்கரை சொக்கநாதர் ஆலயத்தில் இன்று (பிப்.3) திருமணம் நடைபெற இருந்தது. காலை திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வராமல் இருந்ததால் பெண் வீட்டார் பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

News February 3, 2025

18 ஆண்டுகளாக 100% தேர்ச்சி – ஆசிரியைக்கு விருது

image

RVCE Institution மற்றும் Student.com சார்பில் ராமநாதபுரத்தில் நேற்று (பிப்.02) நடைபெற்ற விழாவில் கணினி அறிவியல் பாடத்தில் கடந்த 18 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று தந்த பணியை பாராட்டி ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை முஹமதியா மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை ஜனாபா சீனி அஸ்ரா ரீனாவுக்கு பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் Inspirational Teacher Award வழங்கி கௌரவித்தார்.

error: Content is protected !!