India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (பிப். 07) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டிச. 24 அன்று தொழிலுக்குச் சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகுகளில் 17 மீனவர் சிறை பிடிக்கப்பட்டனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்ற நீதிபதி ரபீக் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 17 மீனவரில் 2ஆவது முறையாக கைதான இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை, எஞ்சிய 13 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திற்கும் அரசு சார்பில் ( திறன் பலகை) ஸ்மார்ட் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் நம்புதாளை துவக்கப்பள்ளிக்கு நான்கு ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராம்நாடு மாவட்டத்தில் நாளை(பிப்.8) 9 தாலுகாவிலும் ரேசன் பொருட்கள் வினியோகம் குறித்த குறைத்தீர் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, ராம்நாடு-பேராவூர், ராமேஸ்வரம்-சந்தை, திருவாடானை-காரங்காடு, பரமக்குடி-மென்னந்தி, முதுகுளத்தூர்-கீழக்கொடுமலூர், கடலாடி-கீழமுந்தல், கமுதி-கீழராமநதி, கீழக்கரை-திருவள்ளுவர் நகர், ஆர்.எஸ் மங்கலம்-அரியான் கோட்டை கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.
உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற அரசு பஸ், பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வந்த சுற்றுலா வேன் இன்று மாலை நேருக்கு நேர் மோதின. இதில் வேனில் வந்த 10 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை உச்சிப்புளி போலீசார் துரிதமாக மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப். 06) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் வடக்குத் தெரு பாலமுருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச விழாவையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பனைக்குளம் – அழகன்குளம் சந்திப்பில் நாடார் வலசை மதுக்கடை ராமநாதபுரம் கலெக்டர் சிமரன் ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில் ஜன.31ல் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மதுவிற்பனை மீண்டும் துவங்கியது. இதைகண்டித்து நாடார்வலசை மக்கள், SDPI,WIM அமைப்பினர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாடார் வலசையில் இன்று காலை 2வது நாளாக போராடியவர்களை போலீசார் தடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மேற்படிப்புக்கு கல்வித்தொகை பெற விண்ணப்பிங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிம்ரஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அதிமுக பிரமுகர் சிகாமணி, அன்னலட்சுமி, கயல்விழி, ராஜமுகமது, பிரபாகரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கை 5 மாதத்திற்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சாட்சி விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கு பிப்.12 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.