India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கச்சிமடம் ஜான் போஸ், சகாயம் ஆகியோரின் 2 விசைப்படகுகளில் பாம்பன், தங்கச்சிமடம், கீழக்கரை பகுதி மீனவர்கள் 14 பேர் நேற்று காலை மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை நேற்று (பிப்.09) அதிகாலை 2 படகுகளுடன் சிறை பிடித்தது. இந்த 14 பேருக்கும் பிப்.19 வரை சிறை தண்டனை விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று (பிப்.09) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X பக்கத்தில் அறிவித்துள்ளது.
பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட திருவேட்டை உடைய அய்யனார் கோவில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவிலாகும். மேலும் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவிலாகும். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் கோவிலை சொந்தமான கோவிலாக மாற்ற முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப். 09) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் பி-1 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது அப்பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகர் சித்திரைச்சாமி மகன் முத்துக்குமரன் (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் – தேவிபட்டினம் சாலை பேராவூர் எம் ஜி பப்ளிக் பள்ளி தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் – II & IIA தேர்வு 19 அறைகளில் இன்று நடந்தது. இதனை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். இத்தேர்வெழுத விண்ணப்பித்த 376 பேரில் காலை, மாலை இரு வேளை நடந்த தேர்வில் 341 பேர் தேர்வு எழுதினர்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப். 08) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
சுமார் ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் திறக்கப்பட இருப்பதால் அதன் இறுதி கட்ட ஆய்வு மற்றும் ஒத்திகை நிகழ்வு இன்று (பிப்-8) நடைபெற்றது. தென்னக ரயில்வே மண்டல மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்து கொடியசைத்தார். ஒரே நேரத்தில் 2 பாலங்கள் திறந்து கப்பல் மற்றும் இரயில் கடந்த நிகழ்வை சுற்றுலா பயணிகள் கண்டுரசித்தனர்.
திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன-28 முதல் பிப்-2 வரை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நடந்தது. மலேசியா, சவுதி அரபியா, நேபாளம் ஆகிய வெளிநாடுகள், வெளி மாநில சாரணியர் இயக்கம் மாணவர்கள் பங்கேற்றனர். ஒரே இடத்தில் 20,000 சாரணர்கள் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 24 பேர் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.மங்களம் , குமிழேந்தல் விவசாயி தனது பெயரில் உள்ள சொத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது சம்மந்தமாக பகவதி மங்களம் குரூப் VAO பார்த்திபன் சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு VAO பட்டா பெயர் மாற்றம் செய்யரூ.37000 தனக்கு தனியாக வேண்டும் என கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் லஞ்ச ஒழிப்பில் புகார் செய்தார். VAO பார்த்திபனை கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.