India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமக்குடியில் நேற்று முன் தினம் இரவு வழக்கறிஞர் உத்தர குமார் வெட்டி கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் இருசக்கர வாகனத்தில் வந்து வாளால் வெட்டி கொலை செய்த பரமக்குடி வைகை நகர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், அப்துல் கலாம், கிரண் ஆகிய 3 இளைஞர்களை இன்று பரமக்குடி நகர் காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோவில் 85வது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 2-ம் தேதி காப்புகட்டு திருவிழா தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரம்மபுரீஸ்வரர் கோவில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்து மதியம் 12:00 மணி அளவில் கடக லக்னத்தில் வழிவிடு முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
கமுதி, முதல்நாடு கண்மாய் கரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். வருடத்திற்கு ஒரு முறை (புரட்டாசி) திருவிழா நடைபெறும். இத்திருவிழா ஆண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. இதில் பெண்களுக்கு அனுமதியில்லை. இங்கு மண்ணால் பீடம் அமைத்து, எல்லைப்பிடாரி அம்மன் உருவம் செய்து 50 கிடாய்களை பலியிட்டு, அதன் தலைகளை பீடத்திற்கு முன் வைத்து, பூஜை செய்வர். மீதமுள்ள உணவு குழிதோண்டி புதைக்கப்படும். *தகவலை ஷேர் பண்ணுங்க
ராமேஸ்வரம், சம்பையைச் சேர்ந்த பிரபு,விமலா தம்பதியினருக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு கடன் தொல்லை இருந்த நிலையில், பிரபு வெளியூரில் தங்கி வேலை பார்த்துள்ளார். கடன் தொல்லையால் அவதிப்பட்ட விமலா, வீட்டில் மகளை துாக்கிலிட்டு கொலை செய்தார். பின், தானும் துாக்கில் தொங்கினார். விமலாவை உறவினர்கள் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரணை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை ஊரில் அமைந்துள்ளது மங்களேசுவரர் சிவன் கோவில். இங்கு உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் 3000 வருடங்களுக்கு முந்தையது. உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் இந்த கோவில் எனக் கூறப்படுகிறது. சந்தனக் காப்பில் காட்சி தரும் நடராசரை வழிபட்டால் முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைகள் தீரும் என்பது நம்பிக்கை. உடனே ஷேர் செய்யுங்கள்.
உச்சிப்புளி இருமேனியில் இன்று (மார்ச்.6) அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த குளிர்சாதன பெட்டி, வாசிங் மிஷின், மின் மோட்டார்கள், ஏசி உள்ளிட்டவை பழுதாகின. அப்போது தாஹிரா என்பவரது வீட்டில் உயர் மின்னழுத்தத்தால் மின் பொருட்களோடு வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போகலூா், முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வானவில் மன்றம் வினாடி வினாப் போட்டியில் மாணவிகள் சுவாசிகா(11), கதிா்மதி(13) மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா். இவர்களுடன் 52 மாணவர்கள் (பிப்.23 – 28) மலேசியா, சிங்கப்பூா் நாடுகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் வெளிநாடு கல்விச் சுற்றுலா சென்று வந்தனா். இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்நிகழ்வை *ஷேர் செய்யுங்கள்
முதுகுளத்தூர், விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் உத்திரகுமார் (35), வக்கீலுக்கு படித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் இவர் சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று இரவு பரமக்குடியில் மூன்று இளைஞர்கள் உத்திரகுமாரை சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் உத்திரகுமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே தலை சிதைந்து பலியானார். பரமக்குடி நகர் போலீசார் விசாரணை.
ராமநாதபுரம், தேவிப்பட்டிணத்தில் உள்ள நவபாஷாண நவகிரக கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இங்கு ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவகிரகம் கடல் அலையை பொருத்து கடலில் சிறிதோ, முழுமையாகவோ மூழ்கி இருக்கும். களத்திர தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், பிதுர் தோஷம், ஆயுள் தோஷம், நட்சத்திர தோஷம், சனிதோஷம், பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க இக்கோவிலுக்கு செல்லலாம். *நண்பர்களுக்கு பகிரவும்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.5) நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்: நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் கீழக்கரை ஆகிய பகுதிகளில் நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் அழைப்பு எண் 83000 31100அல்லது 100 அணுகவும்.
Sorry, no posts matched your criteria.