India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்திற்கு முகவை என்ற பெயர் உள்ளது. சங்க இலக்கியங்களில் முகவை என்ற சொல்லுக்கு அள்ளுதல், நெற்பொலி என்ற அர்த்தங்கள் உள்ளன. ராமநாதபுரத்தில் அதிக அளவில் நெல் விளைந்ததால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் போன்ற ஊர்கள் உள்ளன. தற்போது வறண்டுள்ள ராமநாதபுரம் முன்பு செழிப்பான பகுதியாக இருந்துள்ளது என நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல் நிலை பகுதியில் மோகன்ராஜ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மனைவி மீது ஏற்பட்ட நடத்தை சந்தேகத்தால் அவரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். வழக்கை விசாரித்த இராமநாதபுரம் விரைவு மகிளா நிதிமன்ற நடுவர் கவிதா 302 IPC-யின்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். *இது குறித்த உங்க கருத்தை கமெண்ட் பன்னுங்க*
இன்று (08.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகளத்தூர், கமுதி, இராமேஸ்வரம், கீழக்கரை, நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். மேலும் எளிதாக மக்களிடையே சென்றடைய மாவட்ட காவல்துறை தனது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளது.
பரமக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பரமக்குடியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1மணி வரை ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வையாளர் வெண்ணிலா தலைமையில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. பரமக்குடி கோட்ட மின் நுகர்வோர்கள் கோரிக்கைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம். *மறக்காம எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க*
இராமநாதபுரத்தில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.
திருவாடானை, சின்னக்கீரமங்கலத்தில் 70 அடி உயரத்தில் 60 வயதுடைய கூந்தல் பனை மரம் 3 மாதங்களுக்கு முன் பூக்கள் வைத்து தற்போது கொத்துக்கொத்தாக காய்கள் பிடித்துள்ளது. இந்த காய்கள் சிறுநீரக கோளாறு, அம்மை, கொப்பளம் போன்றவைகளுக்கு பக்க விளைவு இல்லாத மருந்தாக விளங்கி வருகிறது. இவை 60 – 70 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே முதிர்ச்சி பெறும் பின் தானே அழிந்துவிடும். *ஷேர் செய்து பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்*
ராமநாதபுரத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 7 இடங்கள் உள்ளன. அதன்படி, ராமநாதபுரம் அரண்மனை, அருள்மிகு வழிவிடு முருகன் கோவில், பாம்பன் பாலம், ஏபிஜே அப்துல் கலாம் நினைவுச் சின்னம், வில்லூண்டி தீர்த்தம், அரியமான் கடற்கறை, திருப்புல்லாணி ஆதிஜகன்நாத பெருமாள் கோயில் ஆகியவை சிறந்த சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. இங்கு கண்டிப்பாக நண்பர்களுடன் சென்று போட்டோ எடுத்து மகிழலாம்.*நண்பர்களுக்கு ஷேர் பன்னவும்
பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 64 தேர்வு மையங்களில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 14,203 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 152 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வில் மாணவர்கள் 222 பேரும், தனித்தேர்வாளர்கள் 16 பேர் என 238 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 7வது புத்தகத் திருவிழா இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மார்ச்.21 முதல் 30 வரை நடக்கிறது. இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் முன்னணி புத்தக பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பல ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இதே போல ஓவியங்கள், மூலிகைக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. *மறக்காம புத்தக வாசிப்பாளர்களுக்கு ஷேர் பண்ணுங்க
வலுவான உயர் அழுத்தம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பகலில் வானம் மேகங்கள் சற்று தெளிவாகவும் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் காணப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக உள்பகுதிகளில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.
Sorry, no posts matched your criteria.