Ramanathapuram

News September 8, 2024

BREAKING: ராம்நாடு அருகே விபத்தில் 5 பேர் பலி!

image

தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் ராஜேஷ்(33). இவர் குடும்பத்துடன் ராமநாதபுரம் சென்று காரில் இன்று(செப்.,8) அதிகாலை ஊர் திரும்பியபோது, பிரப்பன்வலசை பகுதியில் நின்ற அரசுப் பேருந்தின் பின்புறம் கார் மோதியது. இதில் ராஜேஷ், அவரது மகள்கள் தர்ஷிலா ராணி(8), பிரணவிகா(4) & உறவினர்கள் அங்காளேஸ்வரி(58), செந்தில் மனோகரன்(70) ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 8, 2024

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமநாதபுரம் வருகை

image

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்குக்குழு தலைவருமான கு.செல்வப்பெருந்தகை இன்று (செப். 08) பகல் 12.15 மணிக்கு ராம்நாடு வருகிறார். இதனை  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் ராம்மோகன் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

தலைவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய ராஜீவ் காந்தி

image

தேவிபட்டினம் அடுத்துள்ள சித்தார்கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு இன்று (செ,07) திமுக மாநில மாணவர் அணி தலைவரும் வழக்கறிஞருமான ராஜிவ்காந்தி தனது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 7, 2024

தலைமை ஆசிரியருக்கு சமூக சிற்பி விருது

image

இராமநாதபுரம் எக்னாமிக் சேம்பர் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இதில், சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் B. ஜவஹர் அலிக்கு, இராமநாதபுரம் சட்டமன்ற
உறுப்பினர் காதர் பாட்ஷா
முத்துராமலிங்கம், சமூக சிற்பி
விருது – 2024 வழங்கினார். இதையடுத்து, விருது பெற்றவருக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News September 7, 2024

ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி

image

ராம்நாடு உச்சிப்புளியை சேர்ந்த பாலமுரளி(33) என்பவரது போனில் பகுதிநேர வேலை மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என தகவல் வந்துள்ளது. அதன்படி இணையத்தில் ஓட்டல்களின் பங்குகளை வாங்கி விற்கும் பணி செய்துள்ளார். இதற்காக ரூ.16 லட்சம் செலுத்திய நிலையில் அவருக்கான வருவாயை எடுக்க முயன்றபோது, மேலும் பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். புகாரில் சைபர் கிரைம் போலீசார் மோசடி வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.

News September 7, 2024

பரமக்குடியில் போட்டித் தேர்வு வகுப்புகள் தொடக்கம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மக்கள் நுாலகத்தில் சுகுணா அகாடமி சார்பில், நீதிபதிகளுக்கான போட்டி தேர்வு வகுப்புகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ், மூத்த வழக்கறிஞர்கள் சௌமிய நாராயணன், செந்தில்குமார் பசுமலை மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்

News September 7, 2024

ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைக்கு இஸ்லாமியர் வழிபாடு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 500க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் இன்று(செப்.,7) விநாயகர் சிலைக்கு இஸ்லாமியர் ஒருவர் சாம்பிராணி புகை போட்டு இஸ்லாமிய முறைப்படி துஆ செய்து வழிபட்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. SHARE பண்ணுங்க ராம்நாட்டின் நற்பண்பை!

News September 6, 2024

இமானுவேல் சேகரன் குருபூஜை எஸ்பிஐ ஆய்வு

image

பரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதற்காக திருவாடானை பகுதிகளில் வாகனங்கள் செல்வதற்கு குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் பகுதிகளை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

News September 6, 2024

நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் பாராட்டு

image

ராமநாதபுரம் தாலுகா ராஜசூரியமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நவரெத்தினத்திற்கு நேற்று சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மாநில நல்லாசிரியர் விருதினை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10 ஆசிரியர்களுக்கு விருது வாங்கி கெளரவித்தார் அமைச்சர்.

News September 6, 2024

இராமநாதபுரம் அருகே மதிமுகவில் இணைந்த பொதுமக்கள்

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் காட்டூரணி பகுதியில் நேற்று (செ,05) எந்த ஒரு இயக்கத்தில் சாராத பெண்கள் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ் தணிக்கை குழு உறுப்பினர் குணா ஒன்றிய செயலாளர் பிர்தௌஸ்கான் மற்றும் மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!