India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில், A4 பேப்பரில் ரூ.100 Xerox அடித்து எடுத்துச் சென்ற இளைஞர் கார்த்திக்(25) என்பவர் நேற்று(செப்.13) போலீசாரால் கைது செய்யப்பட்டார். மொத்தம் இவரிடம் எழுபத்தெட்டு A4 பேப்பர்களில் நான்கு 100 ரூபாய் என ரூ.31,200 Xerox அடித்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் வக்கீல் குமரன் தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபரை பிடித்து ஒப்படைத்தும் கைது செய்யாமல் தப்பிக்க விட்ட அண்ணா நகர் போலீசாரை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தினை உடனடியாக அமல்படுத்த கோரி ராமநாதபுரத்தில் வக்கீல்கள் இன்று(செப்.13) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வழக்கமான கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டன.
ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜீத் காலொன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராமநாதபுரம மாவட்டத்தில், விவசாயிகள் பெரும்பாலும் டி.ஏ.பி உரத்தை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், டி.ஏ.பி உற்பத்தி குறைந்து, விலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. எனவே, டி.ஏ.பி-க்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட், என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.
மதுரை வெங்கடேசன் என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக 2012ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்குப் பதிவு செய்தனர். இதில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். சாட்சிகள் விசாரணைக்கு பின் நீதிபதி (பொறுப்பு)) உத்தமராஜா வழக்கை வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் செப்டம்பர் 19, 21, 23, 26, 28, 30 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து மாலை 05.00 மணிக்கும், செப்டம்பர் 20, 22, 24, 27, 29, அக்.1 நாட்களில் ராமநாதபுரத்திலிருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் – ராமேஸ்வரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கடந்த 22 மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்க இருக்கிறது. முன்னதாக, அக்டோபரில் பாம்பன் புதிய பாலம் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி முதல் இதுவரை குழந்தை திருமணம் தொடர்பாக 72 தொலைபேசி புகார்கள் வந்ததில் 54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 15 திருமணங்கள் நடந்து முடிந்த பின்னர் தகவல் கிடைத்ததால் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 8 குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழா பரமக்குடியில் இன்று(செப்.11) நடைபெற்று வருகிறது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடன் பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (செ,11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள இன்று பரமக்குடிக்கு வருகை தந்த தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இம்மானுவேல் சேகரனார் குருபூஜை விழாவிற்கு இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பரமக்குடிக்கு வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குருபூஜைக்கு வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராமநாடு காவல்துறை மிகவும் அலட்சியமாக செயல்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.