India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 2023 முதல் செப்டம்பர் 2024 வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 3,203 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 357 கடைகளுக்கு ரூ.71.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றாலோ, விற்பனைக்காக எடுத்து சென்றாலோ, பதுக்கி வைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இன்று(அக்.,15) முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு காலம் ஹால்ப் மாரத்தான் போட்டியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்துல் கலாம் பேரன் சேக் சலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையை சேர்ந்த வெங்கடேசன் திருட்டு வழக்கு தொடர்பாக 2012ஆம் ஆண்டு எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அப்போது, போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு வழக்கை வரும் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி குருபூஜை விழா அக்.,30-ல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் நேற்று அழைப்பு விடுத்தனர்.
இன்று (14.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும், வேறு எதாவது உதவி தேவைப்பட்டால் உதவி எண் 100 ஐ டயல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024 அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும். அதன்படி, இன்று(14/10/2024) குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் மனுக்களை அளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித் சிங் காலோன் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும், அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களுக்கு உறுதி அளித்தார் .
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணி தெரியப்படுத்தவும்*
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பெய்த மழை அளவு ராமநாதபுரத்தில் 11 மி.மீ., மண்டபம் 12.20 மி.மீ., ராமேஸ்வரம் 45 மிமீ,பாம்பன் 8.30 மிமீ, தங்கச்சிமடம் 11.40மிமீ, திருவாடானை 33.80 மி.மீ., தொண்டி50 மி.மீ., ஆர்.எஸ்.மங்கலம் 16 மி.மீ., முதுகுளத்தூர் 4.20 மி.மீ., வாலிநோக்கம் 4 மி.மீ., கமுதி 7.60 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியாக 19.52 மி.மீ., அளவில் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.
Sorry, no posts matched your criteria.