India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை சின்னக்கண்ணு DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் சிறப்பு திட்டம் இன்று நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மாணவர்களுக்கு வழங்கவுள்ள உணவுப்பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். உடன், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது இர்பான் இருந்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்நாடு மாவட்டம் தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாஙகியுள்ளார். ஆனால் கடன் வாங்கி தராமல், தான் பெற்ற பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். விசாரணைக்கு நேற்று பவர் ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை நவ.,15-க்கு ஒத்திவைத்தார்.
நடிகை கவுதமியின் உதவியாளரான பைனான்சியர் அழகப்பன், கவுதமிக்கு முதுகுளத்தூரில் நிலம் வாங்கி தருவதாக ரூ.3.16 கோடி ஏமாற்றினார். இது குறித்த புகாரில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு போலீசார் அழகப்பனை கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அழகப்பனின் மேலாளர் மதுரை ரமேஷ் சங்கர்(55) என்பவரையும் கைது செய்த நிலையில் அவரை காவலில் எடுத்து மதுரையில் உள்ள வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கிய அமலதாஸ் மகன் ரெக்சன் (12) அப்பகுதியில் தனியார் பள்ளி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று (அக் 15) காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு செல்வதற்காக வழக்கம்போல் வீட்டில் இருந்து கிளம்பி பள்ளி அருகே வந்தபோது, அந்த சிறுவனை காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்ற நிலையில் தப்பித்து வீடு வந்து சேர்ந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத் தலைவர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உத்தரவுபடி அனைத்து தாலுகாக்களிலும் சுழற்சி முறையில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் கால தகவல்களை தெரிவிக்க மாவட்ட அவசர கட்டுப்பாடு அறை எண்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் அறிவித்துள்ளார். அதன்படி, 1077 மற்றும் 04567- 230060 அவசர கால கட்டுப்பாட்டு எண் மற்றும் 8300175888 என்ற வாட்சப் எண்களை அறிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அடுத்த பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் இன்று (அக்,15) தூவ செய்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.