Ramanathapuram

News October 29, 2024

தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு(அக்.29) இரவு 7.45மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து இராமநாதபுரம் கிளம்பும் விரைவு ரயில் & (அக்.30) புதன்கிழமை இரவு 8.15மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து கோயம்புத்தூர் கிளப்பும் விரைவு ரயில் ஏற்கனவே இருக்கும் முன்பதிவு பெட்டிகளுடன் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்க வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News October 29, 2024

ராமநாதபுரத்தில் தீபாவளியன்று மழை பெய்ய வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழையை ஒரு சில இடங்களில் எதிர்பார்க்கலாம். மழையானது பொதுவாக மாலை நேரத்தில் பெய்ய வாய்ப்பு உள்ளது. தீபாவளி அன்றும் ஒரு சில இடங்களில் மட்டுமே பெய்ய வாய்ப்பு உள்ளது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை இருக்காது. பரவலான மழை நவ.6ம் தேதி முதல் இருக்கக் கூடும் என ராமநாதபுரம் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

News October 28, 2024

எஸ்.பி, ஏடி எஸ்பி, 2 டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு பணி

image

திருவாடானையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு இப்பகுதியில் கரூர் மாவட்ட காவல் எஸ்பி புரோஸ்கான் அப்துல்லா தலைமையில் கள்ளக்குறிச்சி கூடுதல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் தென்காசி டிஎஸ்பி சாந்தமூர்த்தி, வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஸ் சந்திரபோஸ் என இரண்டு டிஎஸ்பி உள்பட காவல ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், அதிவிரைவு படை என 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 28, 2024

அக்.31 டாஸ்மாக் கடைகள் திறப்பு

image

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூன்று நாள் அடைக்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 30 ம் தேதி மாலை 5 மணிக்கு கடை திறக்கப்படும் என போர்டு வைக்கப்பட்டுள்ளது. 31 தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

News October 28, 2024

தேவர் குருபூஜை இன்று முதல் தொடக்கம்; அக். 30 முதல்வர் வருகை

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று(அக்.28) முதல் பசும்பொன்னில் விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அக்.30 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கழக செயலாளர் மற்றும் கழகத் தொண்டர்கள் கட்சி பிரமுகர்களுக்கு வழிதடம் சீரமைக்கப்படுகிறது.

News October 28, 2024

முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்த முதல்வர்

image

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று(அக்.28) சென்னை தலைமை செயலகத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News October 28, 2024

பசும்பொன்னில் இன்று தொடங்குகிறது குருபூஜை விழா

image

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா இன்று‌(அக்,28) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை, 7:35 மணிக்கு கணபதி ஹோமம், லட்சார்ச்சனை பெருவிழா நடைபெற்றது. தொடர்ந்து 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் இரவு 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன.

News October 28, 2024

மாணவர்களை தாக்கிய தலைமை ஆசிரியை மீது வழக்கு

image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஷ்வரம் தங்கச்சிமடம் ஊராட்சிக்குள்பட்ட மெய்யம்புலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் கழிப்பறையில் மாணவர்கள் தவறான வாசகங்களை எழுதினர். இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை ஷாலினி சில மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 27, 2024

குருபூஜைக்கு சென்று திரும்பும் போது விபத்தில் இளைஞர் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் விக்னேஷ்(24). இவர் இன்று(அக்.27) காலை ராமேஸ்வரத்திலிருந்து காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு காரில் சென்றார். இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை மடக்கொட்டான் அருகே சென்ற போது காரில் இருந்து தவறி கீழே விழுந்தவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

News October 27, 2024

மீனவர்களின் 10வது நாள் வேலை நிறுத்த போராட்டம்

image

மண்டபம் பகுதியைச் சேர்ந்த 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அக்.14ம் தேதி கைது செய்து வவுனியா & யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் நவ.9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்தது, 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 10வது நாளை எட்டியது.

error: Content is protected !!