India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2723 கோடி வங்கி மூலம் கடன் வழங்கும் விழா மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் சுய உதவி குழுவிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடன் வழங்கினார். திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கேகே செல்ல பாண்டியன், ஆட்சியர் அருணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுகை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக ராஜராஜன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்ட DRO-வாக இருந்த செல்வி பணி ஓய்வு பெற்ற பிறகு புதுகை மாவட்டத்தில் புதிய டி ஆர் ஓ ஆக ராஜராஜன் செயல்படுவார் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பதவியேற்று கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் உலகநாதன் உடன் இருந்தார்.
புதுக்கோட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: 108 அவசர ஊர்திகளை இயக்க ஓட்டுநர்கள் தேவை. இதற்கு தகுதியாக குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வியும், ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும். இதேபோல் மருத்துவ உதவியாளருக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.எஸ்.சி. நர்சிங் முடித்த ஆண்/பெண் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்தை அணுக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 714 விநாயகா் சிலைகள் சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன்படி சனிக்கிழமையே மாவட்டத்தின் 96 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான சிலைகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக புகரப் பகுதிகளிலுள்ள 361 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
விராலிமலை மற்றும் வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (செப்.10) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கோமங்கலம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், சூரியூர், ஆலங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் நேற்று மாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து இன்று காலை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இன்று அவர்களை விசாரித்த இலங்கை நீதிமன்றம் வரும் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
திருமயம் பைபாஸ் சாலையில் புதுக்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் அந்தோணி என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல் துறையினர் திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெகதாப்பட்டத்தில் இருந்து மீனவர்கள் சிலர் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் புகைப்படங்களை இலங்கை கடற்படை இன்று வெளியிட்டுள்ளது .
முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் இல்ல மணவிழாவில் கலந்து கொள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று வருகை தந்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.