Pudukkottai

News March 13, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 12, 2026

புதுக்கோட்டை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE

News March 12, 2026

புதுக்கோட்டை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.!

News March 12, 2026

புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டி படுகொலை!

image

புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள அசோக் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சுமன் என்பவரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்கள் சரமாறியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சுமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 12, 2026

புதுக்கோட்டை: ரூ.65,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

புதுக்கோட்டை: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

புதுக்கோட்டை: அம்பேத்கர் சிலைக்கு தலைப்பாகை – பரபரப்பு

image

புதுகை பழைய பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் சிலைக்கு நேற்று மர்ம நபர்கள் தலைப்பாகை கட்டி சென்றனர். அம்பேத்கர் சிலையை சுற்றி கூண்டுகள் அமைத்து பூட்டப்பட்டுள்ளதையும் மீறி தலைப்பாகை கட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகாலை போலீசார் விரைந்து வந்து அந்த தலைப்பாகை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகர காவல் துறையினர் அப்பகுதி உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

News March 12, 2026

புதுக்கோட்டை: திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிடுள்ளார். அதில், 2027 ஆட்சேர்ப்பு ஆண்டிற்கான அக்னிவீர் பொதுப்பணி பிரிவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இராணுவத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் இதற்கு வருகிற ஏப்.1ஆம் தேதிக்குள்<> www.joinindianarmy.nic.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

News March 12, 2026

புதுக்கோட்டை: திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிடுள்ளார். அதில், 2027 ஆட்சேர்ப்பு ஆண்டிற்கான அக்னிவீர் பொதுப்பணி பிரிவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இராணுவத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் இதற்கு வருகிற ஏப்.1ஆம் தேதிக்குள்<> www.joinindianarmy.nic.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

News March 12, 2026

புதுக்கோட்டை: காட்டில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை

image

விராலிமலை ஒன்றியம் தென்னம்பாடி தெற்கு தெருவில் சுப்பன் என்பவருக்கு சொந்தமான காட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் பிறந்து 3 நாளே ஆன பெண் குழந்தை சடலம் தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து விஏஓ கனக சகாய சந்தியா அளித்த புகாரின் பேரில், விராலிமலை போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!