India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சியிலிருந்து புதுகை வழியாக காரைக்குடி, விருதுநகர் சென்று திரும்பும் பயணிகள் ரயில் சனி, ஞாயிறு தவிர மற்ற நாள்களில் இயங்கி வந்தது. இந்த ரயிலை சனி, ஞாயிறு இரு நாட்களும் இயக்க வேண்டும் என புதுகை பணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இந்த ரயிலை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இதனால் புதுகை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நேற்று விராலிமலை MLA சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாளை மார்.11ஆம் தேதி திருச்சிக்கு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, கிளை, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இருந்து கீரனூருக்கு நேற்று ஹரிஹரன்(22) என்ற இளைஞர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பொம்மாடிமலை சாலையில் அவருக்கு எதிரே காரை ஓட்டி வந்த தட்சிணாமூர்த்தி(45) என்பவர் மோதியதில், ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தட்சிணாமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சவுண்டையா(65). இவர் தீராத வயிற்று வலி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார். இந்நிலையில், நேற்று கடும் வயிற்று வலியின் காரணமாக, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.