India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். 2025-2026 ஆண்டில் முதலாமாண்டு இணையும் மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகைக்கென உள்ள நோடல் அலுவலரை அணுகி UMIS (https://umis.tn.gov.in/) என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 1800-599-7638 எண்னை தொடர்புகொள்ளலாம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருகோகர்ணம் தனியார் மஹால், பொன்னமராவதி சமுதாயக்கூடம், ஆலங்குடி தனியார் மஹால், கறம்பக்குடி தனியார் மஹால், கோட்டைப்பட்டினம் தனியார் மஹால், வடுகபட்டி கலையரங்கம் உள்ளிட்ட 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று(ஆக.26) நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள்<

புதுக்கோட்டை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

புதுகை எம்.எல்.ஏக்களும் அவர்களது இ. மெயில் முகவரியும்
➡️சின்னதுரை(கந்தர்வகோட்டை) – mlagandarvakottai@tn.gov.in
➡️விஜய பாஸ்கர் (விராலிமலை) – mlaviralimalai@tn.gov.in
➡️முத்துராஜா (புதுக்கோட்டை) – mlapudukkottai@tn.gov.in
➡️ரகுபதி (திருமயம்) – mlathirumayam@tn.gov.in
➡️மெய்யநாதன், சிவ.வீ (ஆலங்குடி) – mlaalangudi@tn.gov.in
➡️ராமச்சந்திரன் (அறந்தாங்கி) – mlaaranthangi@tn.gov.in.
➡️ ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.