India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது புதுக்கோட்டை சமஸ்தானம், தனி மாநிலமாக விளங்கிய எல்லைக் கல் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். தனி சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை பல்வேறு காலகட்டங்களில் ஆங்கிலேயருக்கு இணக்கமாக இருந்து தன் அரசைப் பாதுகாத்து வந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948 மார்ச் மாதம் 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ராஜகோபாலத் தொண்டைமானால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா நகரபட்டி அடுத்துள்ள அம்மன்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இரட்டை தேரோட்டம் இன்று (ஆக.,31) மாலை நடைபெற உள்ளது. இந்தத் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

புதுக்கோட்டை, இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க<

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலத்தில் அடையாளம் தெரியாத பெண் புலிவலம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயத்துடன் சாலையில் மயக்க நிலையில் கிடந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (29.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுகை மக்களே, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
Sorry, no posts matched your criteria.