Pudukkottai

News February 12, 2025

அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

image

திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு கணித ஆசிரியராக பணிபுரியும் சுந்தர வடிவேலு (48) என்பவர் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சைடு லைனில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது திருப்பூர் கே.வி.ஆர் நகர் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தலை மறைவான அவரை திருப்பூர் தனிபடை போலீசார் புதுகையில் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News February 12, 2025

கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2வது நபர் கைது

image

புதுகை, செப்பிளாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ராஜ்குமார் (29) என்பவரை, ஜோயல் (21), கார்த்திக் (24), சிவா (24) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கி, ஜோயல் ராஜ்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் ஜோயலை கைது செய்து, தலைமறைவாக இருந்த கார்த்திக் மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கார்த்திக்கை கைது செய்தனர்.

News February 10, 2025

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் சென்ற வாகனம் விபத்து

image

புதுக்கோட்டை, திருப்புனவாசலை சேர்ந்த 11 பேர் சரக்கு மினி வேன் ஒன்றில் பழனிக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற வாகனம் ராமநாதபுர மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியதில் 11 பேர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News February 10, 2025

புதுக்கோட்டையில் இன்று வேலைநிறுத்தம்

image

புதுக்கோட்டை மாவட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரஷார் ஏற்றும் பொருட்களுக்கு டிரான்சிட் பாஸ் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு இன்று வேலையை நிறுத்த ஈடுபட உள்ளனர். 

News February 9, 2025

புதுக்கோட்டை: குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

image

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினம் ஒவ்வொரு ஆண்டும் இரு சுற்றுக்களாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வருகின்ற 17ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை சரி செய்யப்பட்டு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவிப்பார்.

News February 9, 2025

புதுகை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 2 இடங்களில் அனுமதி

image

புதுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த காட்டுப்பட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மற்றும் இலுப்பூர் வட்டம் திருநல்லூரில் செவ்வாய்கிழமை (பிப்.11) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் அரசுச்செயலர் சத்யபிரதசாகு நேற்று வெளியிட்டுள்ளார்.

News February 8, 2025

புதுகை: பெண் காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி

image

புதுகை மாவட்டம் மண்டையூர் காவல் நிலைய பெண் காவலர் விமலா சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் வாட்ஸ் ஆப் குழு மூலம் அவரின் குடும்பத்துக்காக ரூ.16,65,421 நிதி திரட்டினர். இந்த நிதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா மூலம் நேற்று மறைந்த விமலாவின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

News February 8, 2025

தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் செப்பிளாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ராஜ்குமார் (29) என்பவர் வளர்க்கும் கோழி ஒன்று இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஜோயல் (21) என்பவரின் வீட்டிற்கு சென்றதனால் ராஜ்குமாரை, ஜோயல் மற்றும் அவரது நண்பர்களான கார்த்திக் (24), சிவா (24) ஆகியோர் தாக்கி, ஜோயல் ராஜ்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் நேற்று ஜோயலை கைது செய்தனர்.

News February 8, 2025

இலுப்பூர் சப்-டிவிசன் இன்று இரவு போலீசார் ரோந்து பணி

image

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சப் டிவிசன் பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விபரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இலுப்பூர் சப் டிவிசன் பகுதிகளில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இதில் குறிப்பிடப்பட்டுள்ள போலீசார் செல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

உதயநிதி ஸ்டாலின் புதுகைக்கு வருகை!

image

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 9-ம் தேதி புதுகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தர இருக்கின்றார். மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் புதுகை எம்எல்ஏ முத்துராஜா வீட்டிற்கு சென்று அவரது தந்தை படத்தை திறந்து வைக்கிறார். பின்னர் கட்சியினரை சந்திக்கும் அவர் மாலை 7 மணிக்கு சென்னை திரும்புகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

error: Content is protected !!