India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுகை மாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகளில் பீர் விற்பனை கடந்த ஆண்டை விட 25% குறைந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மார்க் அதிகாரி தெரிவிக்கையில் மாவட்டத்தில் 130 டாஸ்மார்க் கடைகள் உள்ளன. தினமும் 3 கோடி 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது. பீர் 2500 பெட்டிகள் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு விட இவ்வாண்டு பீர் விற்பனை 25% குறைந்துள்ளது. இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க இன்று (18.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய காவல் உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் அப் செய்யலாம். இதனை புதுக்கோட்டை மக்கள் பயன்படுத்தி கொள்ள காவல்துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற வேலை நாடும் இளைஞர்களுக்கு சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாகவும், இந்த வேலைவாய்ப்பு முகாம் 21/02/2025 வெள்ளிக்கிழமை அன்று திருச்சி சாலையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் 7 பேர் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிமளம் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் சைல்டுலைன் எண்ணைத் தொடர்பு கொண்டு பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற போலீசார், உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை கைது செய்து போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுகை மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறை சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டைய படிப்பு வரை படித்துள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
மாத்தூர், சோதிராயன்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (18), அவரது தங்கை 16 வயது மாணவி, மாணவி செல்போன் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இதனைப் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். நேற்று அதிகாலை அவர், வீட்டில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். காப்பாற்ற அவரது அண்ணனும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் இறந்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆட்சியரகத்தில் இருந்து தற்போது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற வேலை நாடும் இளைஞர்களுக்கு சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாகவும் இந்த முகாம் 21.2.25 அன்று திருச்சி சாலை உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். இங்கே க்ளிக் செய்யவும். <
புதுகை மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விகான கனவை நனைவாக்க முன்னோடி வங்கிகளுடன் சேர்ந்து பிப்.18ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் மெகா கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் கல்வி கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் ஆலோசனை வழங்கப்படும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மஞ்சப்பை விருதுகளை சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி பிளாஸ்டிக் இல்லாத முன் மாதிரியான பங்களிப்பை செய்த சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் 1ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.