India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கந்தர்வக்கோட்டையில் இந்திய அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 2024-25 பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுகிறது. டிச.31 கடைசி நாள் ஆகும். சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இங்குசி.என்.சி. டெக்னீசியன், சென்ட்ரல் ஏசி மெக்கானிக், சர்வேயர் இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது என்று ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
கீரமங்கலம் பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆவின் பால் தொகுப்பு பால் புதிய குளிர்விப்பு மையத்தினையும், மற்றும் 10 மணியளவில் நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரு வகுப்பறை கொண்ட புதிய வகுப்பறை கட்டடத்தினையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைக்க வைக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் டிசம்பர் 24 ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20:12:24-ம் நாளை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். இதில் விவசாயிகளுக்கு தேவையான குறைகளை முன் வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு, தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 20ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. www.tnprivatejobs.tn.gov.in செய்ய புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE செய்யவும்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களில் பயனுடைய குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ 72,000 லிருந்து 1,20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாங்குடியை சேர்ந்தவர் சின்னபொண்ணு. இவரது உறவினர் ஆறுமுகம் சின்னபொண்ணு வீட்டில் இருந்த கல்லுக்காளை உடைத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட சின்னபொண்ணுவை ஆறுமுகம், கணபதி மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3 பேரும் அடித்ததாக கூறப்படுகிறது. சின்னபொண்ணு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுகையில் வரும் 24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், டிச.26, 28 ஆகிய 2 நாட்கள் வினாடி வினா போட்டியும் புதுகை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். ஒப்புவித்தல் போட்டிக்கு 10 வயதும், மற்ற போட்டிகளில் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், பெயர் பதிவுக்கு புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் 9965748300 தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா தலைமையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் டிச.18 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடைந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் சாலை ஆண்டவர்கள் மெய்மதத்தினர் உள்ளனர். இவர்களுக்கு தனி வழிபாடு முறை, வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். மெய்வழிச்சாலையில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலை பெளர்ணமி கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து சபைக்கரசர் சாலை வர்க்கவான் கார்த்திகை மகா தீபம் ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி நாளை(டிசம்பர்.15) ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் நாளை மறுநாள் (டிசம்பர்.17) திங்கட்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கன மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.