India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மக்களே..முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன்(Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 4,663 ச.கி.மீ
2. மொத்த மக்கள்தொகை: 16,18,345 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 6
4. பாராளுமன்ற தொகுதி: 4
5. வருவாய் கிராமங்கள்: 763
6. ஊராட்சி ஒன்றியங்கள்: 13
7. வட்டங்கள்: 12
8. பேரூராட்சிகள்: 8
9. மாநகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற<

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இருந்து வடகாட்டிற்கு நேற்று குணசேகரன் (60) பைக்கில் சென்றுள்ளார். அப்போது வடகாடு அம்புலி ஆற்றின் அருகே உள்ள சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அழகன்வயல் கிராமத்தில் வரும் ஜன.21ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமினை முன்னிட்டு ஜன.12ம் தேதி முன் மனுக்கள், அழகன்வயல் பி.எம்.எஸ் திருமண மண்டபத்தில் பெறப்பட உள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது மனுக்களை இதில் அளித்து பயனடையலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று ஜன.10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

வடகாடு ஊராட்சி சாத்தன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி குணசேகரன் (60). இவர் நேற்று மாலை அவரது மோட்டார் சைக்கிளில் கொத்தமங்கலத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அம்புலி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், தாறுமாறாக சென்று சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன், தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.