Pudukkottai

News January 12, 2026

புதுக்கோட்டை: கார் மோதி விபத்தில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று சிவா (35) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே காரை ஓட்டி வந்த சபானா (35) மோதியதில், சிவாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

புதுகை: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

image

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

புதுக்கோட்டை: போக்சோவில் இளைஞர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதி சேர்ந்த கார்த்திக் (24), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கீரனூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திகை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 12, 2026

புதுக்கோட்டை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.<<>>in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

புதுக்கோட்டை: மர்ம நபர்களால் இளைஞர் வெட்டிக்கொலை

image

புதுக்கோட்டை அடுத்த அழகம்பாள்புரத்தில், வேப்பங்குடியைச் சேர்ந்த இன்பரசன் என்ற 23 வயது இளைஞர் மர்ம நபர்களால், உடலில் 7 இடங்களில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு, இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் போலீசார் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News January 12, 2026

புதுகை: கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்

image

புதுகை மாவட்டத்தில் உங்க கனவை சொல்லுங்க திட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக துவக்கப்பட்டது. இது குறித்து ஆட்சியர் அருணா தெரிவிக்கையில், இந்த கணக்கெடுப்பு பணிக்கு 1,561 செய்யப்பட்டுள்ளனர். இதற்காக தன்னார்வலராக 978 நபர்களும் கண்காணிப்பாளராக 583 நபர்களும் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 30 குடும்பங்களுக்கு கணக்கு எடுப்பதற்கு ரூ.500 வழங்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள தெரிவித்துள்ளார்.

News January 12, 2026

புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News January 11, 2026

புதுக்கோட்டை: பாவங்களை போக்கும் கோயில்!

image

திருமயம் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி ஒரு கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிழவன் சேதுபதி மன்னரால் 1676-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோட்டையில் மலையை குடைந்து குடைவரை கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிவன், விஷ்ணு சன்னிதிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க..

News January 11, 2026

புதுக்கோட்டை: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

image

புதுக்கோட்டை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே<> கிளிக் செய்து, <<>>எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 11, 2026

புதுகை: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை!

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!