India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்னமராவதி
அருகே உள்ள கொப்பனாங்கண்மாயில் மழை பெய்யவும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான விரால், சிலேபி, அயிரை, கெண்டை ஆகிய மீன்கள் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மணமேல்குடி மீன் மார்க்கெட்டுக்கு தினசரி மீன்கள் இறால்கள் நண்டுகள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்க வியாபாரிகளும் அசைவ பிரியர்கள் மார்க்கெட்டுக்கு வருகின்றனர் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். நேற்று அனைத்துவகை மீன்களும் கூறு போட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர்
ஆலங்குடி அருகே உள்ள
கீழப்பட்டியை சேர்ந்தவர் பழனி வேல்.இவரது மகள் ராஜலெட்சுமி இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு 2 ஆண்டுகளாக வீட்டில்
இருந்துள்ளார்.நேற்று மதியம் வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது.பின்னர் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது சோபாவில் ராஜலெட்சுமி உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக MA கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி , சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா , மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , துணை மேயர் மு. லியாகத் அலி அ, சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அசோகன் மற்றும் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் மே தின கொடியேற்று விழா இன்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு
அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநில தலைமை நிலையச்செயலாளர் மகேந்திரகுமார் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மே தின சிறப்புறையாற்றினார்.
புதுக்கோட்டை, விராலிமலையில் உள்ள முருகன் கோவில் பாடல்பெற்ற தலமாக விளங்குகிறது. புராணக் கதையை கொண்ட இக்கோவில், 1000-2000 காலத்திற்கு முற்பட்டது. இத்தலம் குறித்து அருணகிரிநாதர் 16 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இத்தலத்தில் சரவணப் பொய்கை மர்றும் நாக தீர்த்தமும் உள்ளது. இக்கோவிலுக்கு பிள்ளையை தவிட்டுக்கு வாங்கி தோஷம் கழிக்கும் சடங்குகளும் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி எல்லைக்குள், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் எல்லையோரத்தில் உள்ளது ஏம்பல். அரிமளம் ஒன்றியத்துக்குள்பட்ட இப்பகுதியில் 1984 ல் அரசு வட்டார கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது.
கறம்பக்குடியை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி அஞ்சுகா (32) புதுக்கோட்டை அரசு இராணியார் மகப்பேறு மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவரா பணியாற்றி வந்தார் கடந்த 6 மாதமாக பேறுகால விடுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் பிரசவத்திற்காக அவர் பணியாற்றிய அதே இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதன் பின்பு அவருக்கு இரத்தப்போக்கு அதிகமாகி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே பால்பண்ணைக்கு செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் நீண்ட நாட்களாக அடைப்பு ஏற்பட்டு இருப்பதை சரிசெய்யப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி துணை மேயர் மு. லியாகத் அலி பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஆணையர் ஷியாமளா, காவல்துறை ஆய்வாளர் பாலசுப்ரமணியன், மேஸ்திரி முத்து, மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கோயில் திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்த நிலையில் வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வருகின்றனர். இப்போட்டியில் 23 பேர் காயமடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.