Pudukkottai

News January 22, 2026

புதுக்கோட்டை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

புதுக்கோட்டை: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

புதுக்கோட்டையில் போலீசார் அதிரடி – 2 பேர் கைது

image

நாகுடி பகுதியில் ஜபருதீன்(44), என்பவர் நடத்திவரும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பதுக்குவதாக நாகுடி போலீசாருக்கு தகவல் கிடைந்த்தது. அதன் பேரில் அங்கு சோதனை செய்தபோது, 75 போதைப் பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் அறந்தாங்கி கட்டுமாவடி டீக்கடையில் 105 பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. பின் உரிமையாளர் செல்வமணி 66, அருண்குமார் 33, கைது செய்து, ஜாமினில் விடுதலை செய்தனர்.

News January 22, 2026

புதுக்கோட்டை: ஆடு, கோழி பண்ணை அமைக்க மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

புதுக்கோட்டை: தந்தையை அடித்துக் கொன்ற மகன்

image

குலமங்கலத்தை சேர்ந்த வேலு என்ப்வர் குடிப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாடு மேய்த்துக் கொண்டிருந்த அவரது தந்தை விஜய சுந்தரத்தை மது போதையில் வேலு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு, புதுகை அரசு மருத்துவமையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் வழக்கு பதிந்து வேலுவை கைது செய்தனர்.

News January 22, 2026

புதுக்கோட்டை: மணல் கடத்தியவர் தப்பி ஓட்டம் – போலீசார் தேடல்

image

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ராக்கோட்டை வெள்ளத்தூர் பாலம் அருகே நேற்று அடையாளம் தெரியாத நபர் ட்ரக் வாகனத்தில் மணல் கடத்திக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வல்லத்ராக்கோட்டை காவல் துறையினரை கண்டவுடன், வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனையெடுத்து 1/2 யூனிட் மணலுடன் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்கு பதிந்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

News January 22, 2026

புதுக்கோட்டை: டாஸ்மாக் விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஜன.26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள் உள்பட அனைத்து மதுப்பான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று மது விற்பனை நடைபெறாது. அதேபோல் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.22) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!