Pudukkottai

News September 10, 2024

புதுக்கோட்டை வரும் முக்கிய பிரமுகர்

image

புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்டத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது குறித்த விவரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளைமாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நத்தமாடிப்பட்டி, கரம்பக்குடி, விராலிமலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

News September 10, 2024

கறம்பக்குடியில் இறந்தும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த இளைஞர்

image

கறம்பக்குடி, தீத்தாணிப்பட்டி சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூரில் காஜ பட்டான் வைத்துள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதி இரவு சொந்த ஊருக்கு செல்வதற்கு திருப்பூர்-கோவை செல்லும் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது நான்கு சக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை செயலிழந்தது. அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

News September 10, 2024

ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் தேர்வு

image

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஆதிதிராவிடர் பள்ளி கல்வித் தரம், பயிற்சி நிலை வசதி மேம்பாட்டிற்காகவும், விளையாட்டு வசதிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மேம்பாட்டு குறித்து ஆலோசனை வழங்கி உறுப்பினர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிட பழங்குடியினர் அமைப்பு வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News September 10, 2024

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

image

புதுகை மாவட்ட விளையாட்டு திடலில் முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டுப் போட்டிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மேகநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் சுருள்வாள் வீச்சு, கராத்தே, சிலம்பம், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

News September 10, 2024

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: கண்காணிப்புக் குழு தேர்வு

image

புதுகை மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இக்குழுவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சேர்ந்த நபர்கள் தகுதி உடையோர் ஆவர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 10, 2024

முதல்வர் அறிவிப்புக்கு மூத்த குடிமகன்கள் மகிழ்ச்சி

image

புதுகை மாவட்ட மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீக பயணம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை மதுரை, கோவை திருச்சி, மண்டலங்களில் உள்ள வைணவக் கோவில்களுக்கு 1000 பக்தர்களை கட்டணமில்லா பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை புதுக்கோட்டை மாவட்ட மூத்தகுடிமக்கள் வரவேற்றுள்ளனர்.

News September 10, 2024

புதுக்கோட்டையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

image

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். புதுக்கோட்டை 1287 தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் இன்று செயல்படவில்லை. இதனால் பள்ளிகளில் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

News September 10, 2024

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு தொடர்பான முகாம் வரும் 12ஆம் தேதி ஒன்பது மணிக்கு புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

News September 10, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை

image

புதுகை மாவட்டம் ஒடுகம்பட்டி கலைச்செல்வி பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு, கரம்பக்குடி அருகே கோட்டைக்காடு ராஜேந்திரன் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை மோகன் மகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, வீரப்பட்டி விஸ்வநாதன் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நான்கு பேரும் அவரவர் வீட்டிலேயே தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 10, 2024

திமுக அலுவலகத்தில் எம்பி அப்துல்லா ஆலோசனை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை எம்.பி. எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினருமான ராஜேஸ்வரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!