Pudukkottai

News January 25, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேர் கைது

image

புதுகை மாவட்டம் கொப்பனாபட்டி பகுதியில் சுப்பையா (70), பழனிச்சாமி (61), மெய்யகவுண்டம்பட்டி பகுதியில் அசோக் குமார் (32), விராலிமலை இடையபட்டி பகுதியில் பாண்டியன் (51), ராசாநாயக்கன்பட்டி பகுதியில் இளங்கோவன் (51) ஆகிய 5 பேரும் நேற்று குட்கா பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

News January 25, 2026

புதுக்கோட்டை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க

News January 25, 2026

புதுக்கோட்டை: டிராக்டர் மோதி சிறுவன் பலி

image

கந்தர்வகோட்டை அருகே ஆத்தங்கரைபட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நேற்று இருசக்கர வாகனத்தில் முத்துகுளம் பகுதியிக்கு சென்ற போது, மருதன்கோன்விடுதியைச் சேர்ந்த முத்துராஜ் (42) என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 25, 2026

புதுக்கோட்டை: பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

திருச்சி, எடத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45). இவர் சொந்த வேலை காரணமாக கீரனூர் வந்து மீண்டும் திருச்சி சென்று கொண்டிருந்த போது நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ராம் சரண் (40) என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே இருந்து போனார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரின் கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 25, 2026

புதுக்கோட்டை: தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் அடுத்த விசூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் நேற்று (ஜன.24) அடையாளம் தெரியாத நபர் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 24, 2026

புதுக்கோட்டை: கடன் பிரச்சனையை நீக்கும் சாந்தநாதர்

image

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சாந்தநாதரை தரிசித்தால் முன்வினை பாவம், திருமணத்தடை, கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணியபலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க !

News January 24, 2026

புதுகை: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

புதுக்கோட்டை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து,<<>> Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 24, 2026

புதுக்கோட்டை: வேன் மீது லாரி மோதி விபத்து

image

திருமயம் அருகே உள்ள கன்னிப்பட்டி சாலையில் நேற்று வேன்மீது பழனியப்பன் என்பவர் ஒட்டி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த செந்தாமரை, சௌந்தர்யா, லதா, மாணிக்கவல்லி, கார்த்திகா, சத்தியநாதன் மற்றும் வேன் ஓட்டுநர் விஜி ஆகிய 7 பேருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விஜி அளித்த புகாரியில் திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

புதுக்கோட்டை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

புதுக்கோட்டை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

error: Content is protected !!