India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் மதுபானக்கூடம் ஆகிய அனைத்திற்கும் நாளை இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி யை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு வீரதீர செயல்கள் புரிந்த தேசிய பெண் குழந்தைகள் தின விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு 04322222270 என்ற தொலைபேசி எண்ணிலும், https://awards.tn.gov.in தளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

1878 -1886 புதுகை திவான் அரசு பிரதிநிதியாக பணியாற்றியவர் சேசையா சாஸ்திரி. புதுகை மெரினா என அழைக்கப்படும் புது குளத்தில் உள்ள மண்ணை எடுத்து புதுக்கோட்டை நகரில் இன்றளவும் கம்பீரமாக நிற்கும் பல்வேறு கட்டிடங்களை கட்டச் செய்தவர். மேலும் புதுகை 4 ×4 வீதிகளை அழகுடன் வடிவமைத்தவர். மன்னர் கஜானாவை நிரப்பியவர், மக்களுக்கு எண்ணற்ற பல நன்மை செய்தவர். கேரளா திருவாங்கூர் திவானாகவும் இருந்தவர் சேசையா சாஸ்திரி.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உணவு பாதுகாப்புத் துறை சார்பாக செய்யப்பட்ட நிகழ்வில் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்த உணவுகளின் தரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்வில் கலப்பட பொருள்களை கண்டறிவது குறித்து ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார். இன்று நடந்த நிகழ்வில் மாவட்ட உணவு கலப்பட துறை அதிகாரிகள் பங்கேறனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனேக இடங்களில் மழை பெய்து என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டியை (இலங்கை) ஆண்ட கடைசி மன்னர் விக்ரம ராஜசிம்ஹோ 1816 இல் ஆங்கிலேயரால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மன்னரும் அவரது குடும்பத்தினரும் புதுக்கோட்டை சிறைக்கு கைதியாக அனுப்பப்பட்டனர். அவர்களது பரம்பரையின் பூலாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். மன்னரின் பரம்பரையினருக்கு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட எல்லையான பள்ளத்தூர்-காரைக்குடி பகுதியில் பல்லவன் ரயில் பிரேக் பழுது காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியே சென்னை நோக்கி செல்லும் ரயில் ஆகும். இதனால் புதுக்கோட்டைக்கு 6 மணிக்கு வர வேண்டிய பல்லவன் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 24 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அறுவடை நடைபெற்று வரும் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மேலும் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த, குற்றங்கள் நிகழாமல் தடுக்க, பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்ய, பொது அமைதியை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 65 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இசைக் கலைக்கு, ஏன்? இந்தியாவின் இசை கலைக்கே உயிர் மூச்சாக கருதப்படும் இசை பற்றிய கல்வெட்டு புதுகை மாவட்டம் குடுமியான் மலையில் காணப்படுகிறது. கர்நாடகா இசையின் ராகத்திற்கு “சரிகமபதநி” என்ற எழுத்து குறியீடுகளை கல்வெட்டு அறிமுகம் செய்கிறது. இங்கு காணப்படும் ராகங்கள் 7 அல்லது 8 நான் கொண்ட யாழ்- பரிவாதினி மூலம் வாசிக்கலாம் பரிவாதினி என்ற கல் வெட்டும் இங்கு உள்ளது. Way2news காலச்சுவடு தொடரும்.
Sorry, no posts matched your criteria.