Pondicherry

News December 31, 2024

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புத்தாண்டு வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இந்தப் புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் கொண்டு வருவதாக அமையட்டும். உங்கள் வாழ்வின் பாதை அன்பாலும் வெற்றியாலும் திரப்பப்பட்ட்டும் என்று கூறி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்

News December 31, 2024

புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரி போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புத்தாண்டையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை
நகரப் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்கவும் சாலையில் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் கடலூர் விழுப்புரம் சாலை சந்திப்பு இந்திரா காந்தி சதுக்கம் ராஜீவ் காந்தி சதுக்கம் ஈசிஆர் வழியாக செல்ல வேண்டும்

News December 31, 2024

புதுவை: ஒயிட் டவுன்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை

image

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு குறித்த விளக்ககூட்டம், ஆசிரமம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.ஐ.ஜி., அஜித்குமார் சிங் தலைமையில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.இதில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.

News December 31, 2024

ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ., முதல்வர் அழகானந்தன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில், 6 மாத கால புதிய தொழிற் பயிற்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கைக்கானவிண்ணப்பங்கள்,நேற்று, முதல் மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.,யில் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வழங்க வரும் 2ம் தேதி, கடைசி நாளாகும்

News December 31, 2024

புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல்

image

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் வில்லியனுார் பா.ஜ.க பிரமுகர் செந்தில்குமார் கொலை வழக்கில் கைதான நித்தியானந்தம் தரப்பினருக்கும், திருபுவனை வேலழகன் கொலை வழக்கில் கைதான ஜனா தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, இரு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர்.சிறை வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் போலீசார் 13 பேர் மீது நேற்று வழக்கு பதிந்தனர்

News December 30, 2024

பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் – டிஐஜி பேட்டி

image

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி சத்திய சுந்தரம் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் தன்னார்வலர்கள் உட்பட 2000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கடற்கரை சாலை உள்ளிட்ட நகரப்பகுதியில் அதிகப்படியான காவல்துறையினர் பணியில் இருப்பார்கள். கடற்கரை சாலை பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். நாளையும் நாளை மறுநாளும் கடலில் இறங்க அனுமதி இல்லை என்றார்.

News December 30, 2024

புதுச்சேரி படகு குழாமில் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்

image

புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமில் வாரந்தோறும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். நேற்று போதிய படகுகள் இல்லாததால், குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வெகு நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்த படகு குழாம் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

News December 30, 2024

புதுச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கை: 48 பேர் மீது வழக்கு

image

புதுச்சேரி டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், கிரைம் போலீசார் இணைந்து புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் ஆபரேஷன் திரிசூல் சோதனை மேற்கொண்டனர். முன்னிட்டு, மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடிய 48 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

News December 29, 2024

இறந்த மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை

image

நெடுங்காடு, மத்தளங்குடி கிராமத்தில் நேற்று மாலை மயில் ஒன்று நாய்களால் காயப்பட்ட நிலையில் காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அந்த மயில் உயிரிழந்தது. பின்னர், காவல்துறையினரின் மேற்பார்வையில் நெடுங்காடு போராளி குழு, மத்தளங்குடி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், தேசிய பறவையான மயிலுக்கு, தேசியக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

News December 29, 2024

ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்த நடிகர் 

image

புதுச்சேரி, செயின்ட் தெரேசா வீதியில் வண்ண அருவி ஓவியக் கூடம் உள்ளது. இங்கு மண்ணின் மனம் எனும் தலைப்பில், ஓவியர் ஏழுமலையின் நீர்வண்ண ஓவியக் கண்காட்சி நேற்று மாலை துவங்கியது. நிகழ்ச்சியில், ஓவியர் சுந்தரம் வரவேற்றார். ஓவியக் கண்காட்சியை, நடிகர் சிவக்குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மூத்த ஓவியர் மணியம் செல்வன் முன்னிலை வகித்தார். இந்த கண்காட்சி, வரும் ஜனவரி 10ம் தேதி வரை நடக்கிறது.

error: Content is protected !!