India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் ரிசார்ட்டுகளில் நடந்த புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் அளவற்ற மது வழங்கியதை கணக்கிட முடியாது. இருப்பினும் சுமார் ரூ.50 கோடிக்கு அதிகமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புதுச்சேரியில் மது விற்பனை நடந்துள்ளதாக மது விற்பனையாளர்கள் நேற்று தெரிவித்தனர் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு மாதத்திற்கான விற்பனை நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் பிரேம்குமார் புதுச்சேரியில் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு பைக்கில் வீடு திரும்பிய போது, காலாப்பட்டு பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பிரேம்குமார் மூளைச்சாவு அடைந்ததை ஒட்டி, அவரது கண்கள் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகளை பெற்றோர்கள் தானமாக வழங்கினர். இந்த உறுப்புகள் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் இன்று கொண்டு செல்லப்பட்டது.
புதுச்சேரியில் டிஜிபியாக சாலினி சிங் செயல்பட்டு வருகிறார் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் உள்ளது இந்த நிலையில் புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மற்றும் இதர போலீஸ் நிலையங்களில் என மொத்தம் கடந்த ஆண்டு 7250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே 186 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.முதல் விழுப்புரம் – புதுச்சேரி வரை 29 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்காலிகப் பயன்பாட்டில் உள்ளது இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு ஜன.3- ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அரசிடமிருந்து மாதாந்திர நிதியுதவி எதுவும் பெறாத வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது வரை சுமார் 56,720 குடும்பத்தலைவிகள் பயனடைந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 30 பேர் பதவி உயர்வினை பெற்றுள்ளனர். அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற பத்தாம் தேதிக்குள் பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி கலெக்டர் நடத்திய கலந்தாய்வு கூட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார். அதன்படி மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்தினால் மட்டுமே, இனி நகராட்சி உரிமங்களை புதுப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்
புதுவையில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு போதையில் டூவீலரில் சென்ற கோரிமேடு முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்த அருள்பாண்டியன் (33), விநாயகர் கோயில் தெருவில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் அரியூரை சேர்ந்த தேவராஜ் (21) போதையில் கிழக்கு சாலை சிவாஜி சிலை அருகே டூவீலரிலிருந்து விழுந்து உயிரிழந்தார். மேலும் விபத்தில் சிக்கி 43 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் தங்கள் புகாருக்காக அழைக்க வேண்டிய அவசர எண்கள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவசர அழைப்பு எண்: 112, காவல்துறை கட்டுப்பாட்டு அறை : 04368223100, சைபர் குற்ற தடுப்பு பிரிவு எண்: 94892 05364 எண்கள் மற்றும் காரைக்கால் காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காரை காவலன் செயலை மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி ஜிப்மர் நிறுவனத்தின் இயக்குநராகக் பணியாற்றிய டாக்டர் ராகேஷ் அகர்வால் அவர்களின் பணிகாலம் டிசம்பர் 31, 2024-ல் முடிவடைந்த நிலையில், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படும் வரை, ஜிப்மரின் மூத்த பேராசிரியர் டாக்டர். கவுதம் ராய் அவர்கள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.