Pondicherry

News January 4, 2025

ரூ.177.36 கோடி -முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக அனைத்து குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 5000 உடனடியாக வழங்கப்பட்டது என்றும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த 3,54,726 குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் பயன் பெற்றனர் இதற்காக சுமார் ரூ.177.36 கோடி வழங்கப்பட்டது என்றார்

News January 4, 2025

சூரிய மின் உற்பத்தி திட்டத்தில் 3 கோடி ரூபாய் மானியம்

image

புதுச்சேரி மின் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி மின் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதுவரை 485 மின்நுகர்வோர் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவி உள்ளனர். இவர்களுக்கு 3.04 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2025

முன் அனுமதியின்றி விடுப்பு – தலைமை செயலர் எச்சரிக்கை

image

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் முன் அனுமதி இல்லாமல் விடுப்பு எடுக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட விடுப்பு காலங்களை விட கூடுதலாக விடுப்பு எடுப்பது, அலுவலகம் தொடர்பாக, வெளியே சென்று தங்கும் போது, மீண்டும் அனுமதி இல்லாமல் காலத்தை நீட்டிப்பது அரசு ஊழியர் விதிகளுக்கு புறம்பானது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலர் சரத் சவுகான் நேற்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்

News January 4, 2025

பொங்கல் தொகுப்பு 2000 தர வேண்டும் – வைத்திலிங்கம் பேட்டி

image

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி பொங்கல் நிதியாக ரூபாய் 750 முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார் விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் ரூபாய் 2000 தரவேண்டும் மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்

News January 3, 2025

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகையானது அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News January 3, 2025

சிலிண்டர் மானியத்தில் 1,90,021 குடும்பங்கள்- முதல்வர் ரங்கசாமி

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதலமைச்சரின் சமையல் எரிவாயு மானியத் திட்டத்தின்கீழ் சிவப்பு நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.300/- மற்றும் மஞ்சள் நிற குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு ரூ.150/- என ஆண்டிற்கு 12 சிலிண்டர்களுக்கான மானியம். 1,90,021 குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் பயன் அடைந்துள்ளனர் என்றார்.

News January 3, 2025

மது போதையில் இருதரப்பினர் மோதல் – 10 பேர் மீது வழக்கு

image

புதுச்சேரி பெரிய கடை போலீசார் ரோந்து சென்றனர் அப்போது ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் உணவகம் எதிரே இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர் இதில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் மூன்று பேரை பிடித்து சென்றனர் அவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போலீசாருக்கு எதிரான கோஷங்களை சில பெண்கள் எழுப்பினர் இதில் அமுதா ஹரிணி ஜான்சி சத்யா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்

News January 3, 2025

புத்தாண்டில் புதுச்சேரியில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை

image

புதுச்சேரியில் ரிசார்ட்டுகளில் நடந்த புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் அளவற்ற மது வழங்கியதை கணக்கிட முடியாது. இருப்பினும் சுமார் ரூ.50 கோடிக்கு அதிகமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புதுச்சேரியில் மது விற்பனை நடந்துள்ளதாக மது விற்பனையாளர்கள் நேற்று தெரிவித்தனர் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு மாதத்திற்கான விற்பனை நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

News January 2, 2025

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

image

விழுப்புரம் பிரேம்குமார் புதுச்சேரியில் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு பைக்கில் வீடு திரும்பிய போது, காலாப்பட்டு பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பிரேம்குமார் மூளைச்சாவு அடைந்ததை ஒட்டி, அவரது கண்கள் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகளை பெற்றோர்கள் தானமாக வழங்கினர். இந்த உறுப்புகள் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் இன்று கொண்டு செல்லப்பட்டது.

News January 2, 2025

கடந்த ஆண்டில் புதுச்சேரியில் 7250 வழக்குகள் பதிவு

image

புதுச்சேரியில் டிஜிபியாக சாலினி சிங் செயல்பட்டு வருகிறார் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் உள்ளது இந்த நிலையில் புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மற்றும் இதர போலீஸ் நிலையங்களில் என மொத்தம் கடந்த ஆண்டு 7250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்

error: Content is protected !!