Pondicherry

News January 6, 2025

இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள்      

image

தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அப்போது அவரின் செல்போன் பழுதானது. வெங்கட் நகரில் உள்ள ஒரு செல்போன் கடைக்காரரிடம் கொடுத்து பழுது நீக்கி வாங்கி சென்றார். அப்போது செல்போனில் உள்ள தகவல்கள் அந்தரங்க புகைப்படங்கள் மற்றொரு செல்போனுக்கு பரிமாற்றப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

News January 6, 2025

ஏனாமில் மலர் கண்காட்சி – முதல்வர் திறந்து வைக்கிறார்

image

புதுச்சேரி மாநில ஏனாம் பிராந்தியத்தில் உள்ள பால யோகி மைதானத்தில் இன்று புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் மலர் கண்காட்சி துவக்க விழா இன்று நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளார். விழாவில் வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் புதுச்சேரி அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்

News January 5, 2025

புதுவையில் மூட்டை, மூட்டையாக போதை பாக்குகள் பறிமுதல்

image

புதுவை ரெட்டியார் பாளையம் பகுதியில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்யப்பட்டது. கடைகளுக்கு போதை பாக்குகளை விற்பனை செய்வது யார் என போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடைகளுக்கு போதை பாக்கு விற்க வந்தவரை பிடித்தனர். அதன் விசாரணையில் லாஸ்பேட்டை சாமி பிள்ளைதோட்டத்தை சேர்ந்த சிவக்குமாரை இன்று கைது செய்து போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர்.

News January 5, 2025

அதிமுக செயலாளர் முன்னாள் முதல்வர் மீது குற்றச்சாட்டு

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக நாராயணசாமி ஆண்ட ஆட்சி டெல்லி சுல்தான்களின் அடிமை ஆட்சி போல், அதில் தானும் அடிமையாக ஆட்சி புரிந்ததை மறந்துவிட்டு விரக்தியின் விளிம்பில் தற்போதைய ஆட்சியை, மத்திய அரசின் கைக்கூலி ஆட்சி என தன்னிலை உணராமல் விமர்சித்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

News January 5, 2025

மாநில அறிவியல் கண்காட்சி நாளை துவக்கம்

image

புதுச்சேரி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நாளை ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்க உள்ளது. இதில் புதுச்சேரி மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட 55 படைப்புகளுடன், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் இருந்தும் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இக்கண்காட்சியில் குழு நடனம், தனிப்பாடல், குழுப்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

News January 5, 2025

புதுவையில் கடந்தாண்டு நடந்த விபத்துகளில் 212 பேர் உயிரிழப்பு

image

சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த 1,299 சாலை விபத்துகளில் 232 பேர் இறந்தனர். கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த 1,329 விபத்துகளில் 212 பேர் இறந்துள்ளனர். ஹெல்மெட் அணிவது, அதிவேக பயணத்தை குறைத்தால் 50 சதவீத விபத்து உயிரிழப்புகளை தடுக்க முடியும் என போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி கூறினார்.

News January 4, 2025

கோவிலில் பூஜை பொருட்களை திருடியவர் கைது

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயிலின் பூட்டை உடைத்து கோயிலின் உள்ளே இருந்த பித்தளை பூஜை பொருட்களை திருடிய லாஸ்பேட்டையைச் சேர்ந்த கராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 4, 2025

முதல்வர் ரங்கசாமிக்கு அவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது

image

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் பட்டியலில் 6-வதாக இடம்பெற்றுள்ள முதல்வர் ரங்கசாமிக்கு அவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது. அரசியல் ஆதாயத்திற்காக சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் வன்கொடுமைகளை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்வாரா என்றார்.

News January 4, 2025

கல்வி நிறுவனங்களுக்கு சொத்துவரி விதிக்க வேண்டும்

image

புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பெட்ரோல், டீசல் வரி உயர்வை அரசு உயர்த்தியுள்ளது தேவையற்றது. கல்வி என்பது முழுக்க முழுக்க 100 சதவீதம் வியாபாரமாக நடத்தப்படும் சூழ்நிலையில் தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகளுக்கு சொத்துவரி விதிக்க வலியுறுத்தினார்.

News January 4, 2025

புதுச்சேரியில் குடிநீர் வரி செலுத்த ‘ஆன்லைன்’ வசதி

image

புதுச்சேரியில் குடிநீர் இணைப்பு, கணக்கீடு, வரி வசூல், கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு இணையதள சேவை நேற்று துவங்கப்பட்டுள்ளது. இது முழு யூனியன் பிரதேசத்திற்கும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவதற்கான மையப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். இதன் மூலம் பொதுமக்கள் குடிநீர் கட்டணங்களை எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம்.

error: Content is protected !!