Pondicherry

News January 9, 2025

காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது

image

காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் பல்வேறு பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News January 9, 2025

புதுவையில் ரூ.40 லட்சம் மோசடி

image

புதுச்சேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன். மருத்துவ கல்லுாரியில் சீட்டு தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். அதில் விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். பேசிய நபர் தனது பெயர் வெங்கடேசன் எனவும் மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறினார். அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு 40 லட்சம் முன்பணம் அனுப்பி ஏமாந்துள்ளார். நேற்று சைபர் கிரைம் போலீசில் இமெயில் மூலம் புகாரளித்தார்.

News January 9, 2025

 22,466 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 22,466 மாணவ மாணவியர் பயன் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

இன்ஸ்டாகிராமில் வந்த வேலை – ரூ.40,000 மோசடி

image

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த பிரவீன், இன்ஸ்டாகிராமில் வந்த வேலை வாய்ப்பு விளம்பரத்தை பார்த்து, விண்ணப்பிக்க முயன்றார். அப்போது, செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டதால், ரூ.40 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார். அவர் கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News January 9, 2025

மதுக்கடையை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு

image

புதுச்சேரி சின்னசுப்ராய பிள்ளை வீதியில் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான எம்.எஸ்.ஜி என்ற மதுபான கடை உள்ளது  ஊழியர்கள் வழக்கம்போல் கடையே திறக்க வந்தனர்.மதுபான கடை ஷட்டரில் இருந்த 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சம் திருடப்பட்டு இருந்தது இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் நேற்று புகார் அளிக்கப்பட்டது

News January 9, 2025

ரயிலில் இளைஞர் கைது – நடந்தது என்ன?

image

புதுச்சேரி ஒதியன்சாலை போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், புதுச்சேரி ரயில் நிலையத்தில் அங்கு வந்த புவனேசுவரம் – புதுச்சேரி விரைவு ரயிலில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் பயணித்த வெளி மாநில இளைஞா் ஒருவா், பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுல்தான் அகமதுவை கைது செய்தனர்.

News January 8, 2025

புதுச்சேரியிலிருந்து புஷ்பா பட பாணியில் மது கடத்தல்

image

புதுச்சேரியில் இருந்து கோயம்புத்தூருக்கு மினி லாரியில் தனி அறை அமைத்து, புஷ்பா பட பாணியில் கடத்திச் செல்லப்பட்ட 2400 மது பாட்டில்களை நுண்ணறிவு போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஏழுமலை என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 8, 2025

புதுவையில் எச்எம்பிவி பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை

image

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை எச்.எம்.பி.வி., பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் நிலவும் ஜலதோஷம், சுவாசநோய்த் தொற்றுக்களின் தரவுகளை ஆய்வு சுகாதாரத்துறை செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இருமல் அல்லது தும்மும் போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும் என தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

News January 8, 2025

புதுவையில் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை

image

புதுச்சேரியில் உள்ள மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ. 64.38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

News January 8, 2025

 போஸ்ட் பெய்டு ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டம்

image

புதுவை அரசு மின்துறை சார்பு செயலர் சிவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்மார்ட் மீட்டரை பிரீபெய்டு முறையில் இல்லாமல் தொடக்கத்தில் போஸ்ட் பெய்டு முறையில் செயல்படுத்த அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்ப அடிப்படையில் பிரீபெய்டு முறைக்கு மாறுவதை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!