Pondicherry

News January 28, 2025

வில்லியனூர் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

image

வில்லியனூர் அருகே உள்ள பங்கூர் ஏரி கரையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி போலீசார் அங்கு விரைந்து சென்றனர் அப்போது அங்கிருந்த சிலர் தப்பி ஓட முயன்ற சிலரை சுற்றி வளைத்து கைது செய்தனர் அவர்களிடமிருந்து 11 பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் கவியரசன் நிஷாந்த் ரியாஸ் அகமது ராகதேவன் ஜெயகாந்தன் ஹேமச்சந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்

News January 28, 2025

காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 

image

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆனந்த வேலுக்கு சொந்தமான படகுகளில் நேற்று முன்தினம் 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், மீனவர்களையும் படகுகளையும் மீட்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 28, 2025

தீயணைப்புத்துறை டிரைவர் பணியிடங்களுக்குஎழுத்து தேர்வு

image

புதுச்சேரி தீயணைப்புத் துறையின் கோட்ட அதிகாரி இளங்கோ நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தீயணைப்புத் துறையில் டிரைவர் (கிரேடு 3) 12 டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் உடல் தகுதி தேர்வு 178 தகுதி பெற்றனர். இவர்களுக்கு வருகிற ஒன்பதாம் தேதி எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

News January 28, 2025

செவிலியர் மயங்கி விழுந்து மரணம்

image

புதுவை அரியூர் ரமேஷ். தமிழ்நாடு டாஸ்மாக் கடையில் விற்பனையார். இவரது மகள் அபிராமி, இவர் ஊசுடேரி லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு செவிலியராக இரவு பணியில் இருந்த போது, நள்ளிரவில்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2025

கோர்ட்டில் அத்துமீறி கூச்சலிட்ட பெண் மீது வழக்கு

image

காரைக்கால் நீதிமன்றத்தின் குற்றவியல் நடுவர் 1 அலுவலக வளாகத்தில் மணிமேகலை (42) என்பவர் கோர்ட் ஊழியர்களைப் பார்த்து கூச்சலிட்டதாக, கோர்ட் நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்துள்ளார். அவரை தடுத்த பெண் காவலர் ஜெயசித்ராவை கையில் கடித்து காயப்படுத்தியுள்ளார். இது குறித்து, கோர்ட் சரஸ்வதி சிவசண்முகம் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

News January 27, 2025

8 இளநிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

image

புதுச்சேரி நிதித் துறை துணை சார்பு செயலர் ரத்னகோஷ் கிேஷார் சவுரே நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் புதுச்சேரியில் நிதித் துறையில் பணியாற்றும் எட்டு இளநிலை கணக்கு அதிகாரிகளுக்கு சீனியர் கணக்கு அதிகாரியாக பதவி உயர்வு அளித்து நிதி துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அந்த எட்டு பேர் அந்தந்த பணியிடங்களுக்கு விரைவில் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது

News January 26, 2025

டாக்டர் கே.எம்.செரியன் மறைவு: துணைநிலை ஆளுநர் இரங்கல்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். இதய அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர் செரியன் ஆற்றிய பங்களிப்புகள் தனி முத்திரையை பதித்துள்ளது. செரியனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

News January 26, 2025

புதுச்சேரி மக்கள் நீதிமன்றத்தில் 8 வழக்குகளுக்கு தீர்வு

image

புதுச்சேரி திருவள்ளுவர் நகரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நுகர்வோர் ஆணையத் தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்திலிருந்து 15 வழக்குகள் சமாதானத்திற்கானது என கண்டறியப்பட்டு அந்த வழக்குகள் பேச்சுவார்த்தைக்கு உள்படுத்தப்பட்டன. இதில் 8 வழக்குகளில் சமரச உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது.

News January 26, 2025

எஸ்.பி., எஸ்.ஐ., ஏட்டுவிற்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிப்பு

image

புதுச்சேரியில் நடக்கும் ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போதும், போலீசாரின் சேவையை பாராட்டி சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்படும் வயர்லெஸ் எஸ்.பி. பாஸ்கரனுக்கு, மிக சிறப்பான சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கமும், சிக்மா செக்யூரிட்டி சப்இன்ஸ்பெக்டர் ஆனந்த், போலீஸ் பயிற்சி பள்ளி தலைமை காவலர் கோபதி ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2025

தியாகிகளை கௌரவித்த முதலமைச்சர் ரங்கசாமி

image

குடியரசு திருநாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் தியாகிகளை கௌரவிக்கும் விழா புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கழகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி, இனிப்புகளை வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் அணிபால் கென்னடி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!