Pondicherry

News February 7, 2025

உடனடி கடன் செயலி மூலம் பல கோடி மோசடி – வாலிபர் கைது

image

உடனடி கடன் செயலி மூலமாக, பொது மக்களுக்கு கடன் கொடுத்து, கடன் மற்றும் வட்டித் தொகையை விட பல மடங்கு பணம் கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி ரூ.465 கோடி மேல் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, கேரளா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் என்பவரை நேற்று கைது செய்தனர்.

News February 7, 2025

புதுச்சேரியில் மது விற்பனைக்கு தடை

image

வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு வரும் (பிப்.11) ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராய மற்றும் பார் உள்ளிட்ட, அனைத்து மது கடைகளும் மூடி இருக்க வேண்டும் என கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தடையை மீறி மது விற்பனை செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். SHARE NOW !

News February 6, 2025

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி கதிர்காமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராஜீவ் காந்தி சதுக்கம், வழுதாவூர் சாலை, மேட்டுப்பாளையம் சந்திப்பு இடங்களில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். SHARE NOW !

News February 6, 2025

புதுவையில் மது கடைகளை மூட உத்தரவு

image

புதுச்சேரியில் 11.02.2025 அன்று வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்று‌ம், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். SHARE NOW

News February 6, 2025

நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <>இங்கே<<>> கிளிக் செய்யவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News February 6, 2025

புதுவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுவை பாகூர் முள்ளோடையில் தனியார் பள்ளிக்கு நேற்று (பிப்.5) மாலை வந்த இ-மெயிலில் பள்ளிக்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்த நிலையில், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் தகவல் புரளி என தெரிய வந்தது.

News February 5, 2025

தற்கொலை முயற்சி செய்த முதியவரை காப்பாற்றிய ஐஜி

image

புதுச்சேரி கடற்கரை சாலையில் ஐஜி அஜித்குமார் சிங்லா இன்று மாலை நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது சந்திரகுமார் (74) என்கிற முதியவர் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதனை கவனித்த ஐஜி முதியவரை சமயோசிதமாக செயல்பட்டு அவரது உயிரை காற்றியுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2025

புதுச்சேரியில் போலீசார் ஆயுத படைக்கு மாற்றம்

image

புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரத்தின் நண்பர்களிடம் வலுக்கட்டாயமாக அபராதம் கொடுக்க வேண்டும் என்று தகராறு செய்து அத்துமீறியதாக கூறப்பட்ட கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய ஏட்டுகள் ஞானமூர்த்தி, திவித்ரசன், நவீன் காந்த் மற்றும் போலீசார் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் அதிரடியாக ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி. சுபம் கோஷ் இன்று பிறப்பித்துள்ளார்.

News February 5, 2025

புதுச்சேரியில் வாகன எண்கள் ஏலம்

image

புதுகை போக்குவரத்துத்துறை நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில், புதுவை போக்குவரத்துத் துறையின் PY-02 ஒய் (காரைக்கால்) வரிசையில் உள்ள எண்கள், போக்குவரத்து இணையதளத்தில் வரும் 11ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்படவுள்ளது. ஏலத்தில் தேவையான பெயர், கடவுச் சொல்லை அதே இணையதளத்தில் பிப்.05 முதல் 10ஆம் தேதி வரை பதிவு செய்து  கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News February 4, 2025

‘U’ வடிவ வடிகால் அமைக்கும் பணி: முதல்வர்

image

புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், புதுச்சேரி – கடலுார் சாலை காட்டுக்குப்பம் முதல் கன்னியக்கோவில் பெட்ரோல் பங்க் வரை 3 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் ‘U’ வடிவ வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், இரா.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

error: Content is protected !!