Pondicherry

News March 5, 2025

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலின் சிறப்பு

image

புதுவை ரயில் நிலையத்திற்கு 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மணக்குள விநாயகர் கோயில். மணல் குளத்து விநாயகர் என்ற பெயரே மருவி மணக்குள விநாயகர் ஆனது. புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும் கோயில். இந்த கோயிலின் தங்கத் தேர் ஆண்டுதோறும் விஜயதசமியில் பவனி வருவது வழக்கம்.

News March 5, 2025

மாசிமகம்: புதுவை, காரைக்காலில் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை

image

மாசி மகத்தை முன்னிட்டு காரைக்காலில் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமையும், புதுச்சேரியில் மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் பொதுத்தேர்வுகள் அந்த தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News March 4, 2025

புதுவையில் 4,000 பேருக்கு செவித் திறன் பாதிப்பு

image

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த சில ஆண்டுகளாகப் புதுவை அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் செவித்திறன் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 39 ஆயிரம் பேர் பங்கேற்றதில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு செவித் திறன் பாதிப்பு (காது கேளாமை) இருப்பது கண்டறியப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை குடுத்த இளைஞர் கைது

image

புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு வில்லியனூரைச் சேர்ந்த வினோத் குமார் (22) பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துவினோத் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 3, 2025

பாண்லே நிறுவனத்தின் புதிய ஐஸ்கிரீம் வகைகள் அறிமுகம்

image

புதுச்சேரி அரசு, கூட்டுறவுத் துறையில் புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கிக் கிளைகளின்‌ மூலம் 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 70 மகளிருக்கு ரூ.83.50 இலட்சம் அளவிற்கு கடனுதவியையும் சிறந்த வங்கிக் கிளைகளுக்கு விருதுகளையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் இரண்டு புதிய ஐஸ்கிரீம் வகைகளை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

News March 3, 2025

புதுவை போஸ்ட் ஆபிசில் வேலை : இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். புதுச்சேரியில் மட்டும் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

News March 3, 2025

தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை போலீசார் விசாரணை

image

புதுவை, கோரிமேடு பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் சேதுராமன், மூலகுளம் தனியார் கல்லூரியில் படிக்கிறார். நேற்று முன்தினம் சேதுராமன், கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இரவு 10:30 மணிக்கு மேல் போனில் பேசிக்கொண்டிருந்ததை ரவி கண்டித்தார். இதனால், மனமுடைந்த சேதுராமன், தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 2, 2025

மின்சார நுகர்வோர் பேரணியில் பங்கேற்க புதுவை நிர்வாகிகள் டெல்லி பயணம்

image

அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் சார்பில் மின்துறை தனியார் மையத்தை கண்டித்து புதுடெல்லியில் வரும் 4,5 தேதிகளில் பேரணி கருத்தரங்கம் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க புதுவை மின்சார நுகர்வோர் சங்க செயலாளர் சிவக்குமார் கமிட்டி உறுப்பினர் சண்முகம் ஆகியோர் இன்று ரயிலில் புது டெல்லி புறப்பட்டு சென்றனர். கருத்தரங்கில் புதுவை மாநில கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

News March 2, 2025

டிமிக்கி கொடுக்கும் அரசு ஊழியர்கள்! கணக்கெடுக்க உத்தரவு

image

புதுச்சேரி அரசின் அரசு துறைகளில் விடுமுறையில் சென்ற ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக தலைமை செயலர் சரத் சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, அரசு துறையில் நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவு போடப்பட்டுள்ளது.

News March 2, 2025

புதுவைக்கு மழை எச்சரிக்கை

image

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!