Pondicherry

News April 7, 2026

புதுச்சேரியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

image

புதுச்சேரி லாஸ்பேட்டையில், நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். அவர் அடிக்கடி புதுச்சேரிக்கு வர விரும்புவதாகவும், அதற்கு உங்கள் அன்புதான் காரணம் என்றும் கூறினார். எங்கே பார்த்தாலும் ஊழல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவி வருவதாகவும், புதுச்சேரியை பாஜக ஆட்டிப்படைப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார்.

News April 7, 2026

புதுச்சேரி: ராகுல் காந்தி சந்திப்பில் அதிர்ச்சி

image

புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விசிக 1 என 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. திமுகவின் 5 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகளை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் பொதுக்கூட்ட மேடைக்கு அழைக்கப்படாத நிலையில், ராகுல் காந்தி விமான நிலையத்தில் அவர்களை தனியாக சந்தித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 7, 2026

புதுச்சேரியில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம்

image

புதுச்சேரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், மது மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க 99 பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. மேலும், சிலர் UPI (G-Pay, PhonePe) உள்ளிட்ட ஆன்லைன் வங்கி சேவைகள் மூலம் வாக்காளர்களைத் தூண்ட முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்தள்ளதாக தெரிவித்தனர்.

News April 7, 2026

புதுச்சேரி தேர்தல் – இன்று முதல் தடை உத்தரவு அமல்

image

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்காக, புதுச்சேரி மாவட்டத்தில் பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் (BNSS) பிரிவு 163ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

புதுச்சேரி மத்திய சிறையில் தபால் வாக்குப்பதிவு ஆய்வு

image

புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், காலாப்பட்டு மத்திய சிறையில் தடுப்புக் காவலில் உள்ள வாக்காளர்களுக்காக ஏப்ரல் 6 அன்று தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேரில் பங்கேற்று வாக்குப்பதிவு நடைமுறைகளை பார்வையிட்டார். மேலும் கைதிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

News April 7, 2026

புதுச்சேரி: இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2000 – ராகுல்

image

புதுச்சேரி லாஸ்பேட்டையில் இன்று (ஏப்ரல் 6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும், 30000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

News April 7, 2026

புதுச்சேரி: தேர்தல் சாவடிகளுக்கு கட்டுப்பாடு

image

புதுவை தேர்தல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்குச் சாவடியின் நுழைவு வாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வேட்பாளரோ (அ) அரசியல் கட்சியோ தற்காலிக தேர்தல் சாவடிகளை அமைக்க கூடாது. வாக்குப்பதிவு நாளன்று, வாக்கு சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் பரப்பளவிற்குள் எந்த விதமான தேர்தல் பிரச்சாரமும் செய்ய அனுமதி கிடையாது. இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும் – ராகுல் காந்தி

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்.
புதுச்சேரியை “மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும்” என வலியுறுத்திய அவர், துணைநிலை ஆளுநர் மட்டுமே ஆட்சி செய்வதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார்.

News April 6, 2026

புதுவை: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

புதுவை மக்களே வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். மேலும் இதில் உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News April 6, 2026

லாஸ்பேட்டையில் முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம்

image

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அய்யனார் கோவில், சாந்தி நகர், மடுவுபேட்டை, பெத்துசெட்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

error: Content is protected !!