India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு விடுமுறை தினமான மார்ச்14 (வெள்ளிக்கிழமை) “ஹோலி பண்டிகையை” முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு (OPD) இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் OPD பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அன்று அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் இயக்குனர் அறிவித்துள்ளார். (Share பண்ணுங்க)
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் புதுவையில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட்
புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் கோவிலில் வேலை செய்து வந்துள்ளார். அவர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அவரை குடும்பத்தினரிடமிருந்து சற்று விலகி இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். அவர் முககவசம் அணிந்து தனி அறையில் இருந்து வந்துள்ளார்.அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். லாஸ்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிந்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றது. திமுக எம்எல்ஏ செந்தில்குமார் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுகிறேன் என்பதை தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம், மலையாளம் என 5 மொழிகளில் பேசினார். அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ இதற்காகத்தான் மூன்று மொழிகளை படிக்க சொல்கிறோம். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் சட்டப்பேரவையில் திமுக பாஜக மோதலால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வருகின்ற 14ஆம் தேதி ஹோலி பண்டிகை முன்னிட்டு புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்றும், நோயாளிகள் அன்று வந்து சிரமப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை 15வது சட்டப்பேரவை 6வது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. மேலும் ஃபெஞ்சல் புயலின் போது முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பிற்பகல் 1 மணி வரை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW
புதுவையில் புதிதாக தேர்வாகிய 27வது பேட்ஜ் போலீசாருக்கு, பயிற்சி நிறைவு அணிவகுப்பு, கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று (மா.10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி & உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் நேற்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதால் போலீசாருக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில், புதுச்சேரியை சேர்ந்த ஐயப்பன் நேற்று (மா.10) கொலை செய்யப்பட்டார். புதுவை காவல்நிலையத்தில் ஐயப்பன் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுச்சேரி போலீசாரின் கெடுபிடியால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பதுங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாஸ்பேட்டையைச் சேர்ந்த சந்துரு மற்றும் ஐயங்குட்டிபாளையம் முத்துக்குமரன் ஆகியோருக்கு சூது விளையாட ஐயப்பன் பணம் கொடுத்ததாகவும் அதனை திருப்பி கேட்டு பணம் கொடுக்காததால் முத்துக்குமரன் சந்துரு ஆகியோரை கொலை செய்வதாக ஐயப்பன் மிரட்டியதாக தெரிகிறது. இதனால், முத்துக்குமரன் சந்துரு ஆகியோர் ஐயப்பனை கடத்தி சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.