India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் 22 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. சமீபத்தில் IPL போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுவதாகவும் அதற்கு அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி இணைய வழி குற்றவாளிகள் உருவாக்கிய போலியான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இச்செய்தி முற்றிலும் பொய்யான செய்தி, இதனை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. விழிப்புடன் இருங்கள். SHARE செய்யவும்
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மேலும் அறிய <
புதுவையில் 4 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் நியூட்டன் உணவு பாதுகாப்பு பிரிவில் இருந்து குற்ற பதிவேடு பிரிவிற்கும், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சி.பி.சி.ஐ.டி.பிரிவு, கிட்லா சத்யநாராயணா, பி.சி.ஆர்.பிரிவு, கடலோர காவல்படை வேலயன் குற்றம் மற்றும் நுண்ணறிவு சீனியர் எஸ்.பி.அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை எஸ்.பி அனிதா ராய் பிறப்பித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் தலைமையில் காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காரைக்கால் மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மற்றும் தமிழக மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்ற மக்கள் மன்றம் குறை தீர்ப்பு கூட்டத்தில் 96 புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 52 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளது. இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 275 பொதுமக்கள் (51 மகளிர்) கலந்துகொண்டனர். பெரும்பாலான புகார்களுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை உறுதி செய்தனர்.
புதுச்சோி மாநில புதிய மகளிா் காங்கிரஸ் தலைவியாக இன்று பொறுப்பு ஏற்று இருக்கும் நிஷாவை, முன்னாள் அமைச்சா் R.கமலக்கண்ணன் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் இன்று சந்தித்து பணி சிறக்க தனது வாழ்த்துக்களை தொிவித்தாா்.
புதுவையில் மகளிர் காங் தலைவியாக நிஷா பதவி ஏற்பு, மகளிர் தின விழா, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உடனடியாக அமுல் அமல்படுத்த என முப்பெரும் விழா இன்று கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மகளிர் தலைவி அல்கா லம்பா, வைத்திலிங்கம்.M.P, பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர், கட்சி செயலாளர் ஹேக்டே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மதுபான தொழிற்சாலைகள் கொண்டு வருவதை முதலமைச்சர் ரங்கசாமி கைவிட்டு, ஜவுளி பூங்கா கொண்டு வருவதில் நாட்டம் காண வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் வலியுறுத்தி உள்ளார். இல்லையென்றால் மக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடியலேசானது மிதமான மழையும், மார்ச் 19ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரைக்காலில், கடந்த 2023ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் வந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் சுல்தான் (55) என்ற முதியவருக்கு இரண்டு ஆண்டுகள் வழக்கு நடந்தது. தற்போது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து காரைக்கால் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.