Pondicherry

News April 14, 2026

காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

image

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்பிடி தடைக்காலம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரம் விசைப்படகுகள் நாளை முதல் மீன்பிடி துறைமுகத்தில் ஓய்வெடுக்க உள்ளது.

News April 14, 2026

புதுச்சேரி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> parivahansewas.com <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News April 14, 2026

புதுச்சேரி: வாகனப் பழுது நீக்கும் பயிற்சி சேர்க்கை தொடக்கம்

image

புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், இருசக்கர வாகனப் பழுது நீக்கும் பயிற்சிக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 18 முதல் 45 வயதுடைய, குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 30 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், பயிற்சி காலத்தில் இலவச உணவு வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 0413 2221300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News April 14, 2026

அம்பேத்கர் பிறந்த நாள்: முதலமைச்சர் மரியாதை

image

புதுச்சேரி, அம்பேத்கரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமை பொருள் வழங்க துறை அமைச்சர் திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

News April 14, 2026

விஷு திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

image

புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி, மலையாளப் புத்தாண்டான விஷு திருநாளை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டு மக்களின் வாழ்வில் புதிய தொடக்கம், வெற்றி, நீண்ட ஆயுள் ஆகியவற்றை வழங்கட்டும் என்றும், நினைத்த காரியங்கள் கைகூடி செல்வமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை வேண்டுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

News April 14, 2026

புதுச்சேரி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News April 14, 2026

புதுச்சேரி: வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

image

புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள உசுட்டேரி வாய்க்காலில், ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வில்லியனூர் காவல்துறையினர், சடலத்தை மீட்டு கரைக்கு எடுத்தனர். பின்னர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 14, 2026

புதுச்சேரி – திருப்பதி ரயில் சேவை ரத்து

image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, புதுச்சேரியிலிருந்து திருப்பதி மற்றும் சென்னை நோக்கி இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 15, 18, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில், இந்த ரயில்கள் புதுச்சேரிக்கு பதிலாக விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு பயணிகள் தங்கள் பயணத்தை முன்னதாக திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News April 14, 2026

புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு ரூ.74,000 சம்பளம்!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 330
3. வயது: 22 – 45
4. சம்பளம்: ரூ.74,000
5. கல்வித்தகுதி: B.E. / B.Tech / B.Sc. (Engg)
6. கடைசி தேதி: 30.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 14, 2026

புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு ரூ.74,000 சம்பளம்!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 330
3. வயது: 22 – 45
4. சம்பளம்: ரூ.74,000
5. கல்வித்தகுதி: B.E. / B.Tech / B.Sc. (Engg)
6. கடைசி தேதி: 30.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!