Pondicherry

News March 12, 2025

புதுச்சேரி ஏ.எஸ்.ஐ., சஸ்பெண்ட் – டிஜிபி உத்தரவு

image

புகார் மீது நடவடிக்கை எடுக்க தனது வண்டிக்கு ரூ.500க்கு பெட்ரோல் நிரப்பவும், தனக்கு ஷூ வாங்க ரூ.1,800 பணம் வாங்கிய ஏஎஸ்ஐ சுப்பிரமணியன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உதவி சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணியை, புதுச்சேரி டி.ஜி.பி., ஷாலினி சிங் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதற்கான ஆணை போலீஸ் பயிற்சி பள்ளியில், பயிற்சியில் உள்ள ஏ.எஸ்.ஐ., சுப்ரமணிக்கு வழங்கப்பட்டது.

News March 12, 2025

சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர்

image

2025 – 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ரூ 13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார். விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 2,000 வழங்கப்படும் என்று பேரவையில் ரங்கசாமி அறிவித்தார். பின்னர் சட்டப்பேரவையை நாளை (மா.13) சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

News March 12, 2025

புதுவை காவல்துறைக்கு  ரூ. 401.50 கோடி ஒதுக்கீடு

image

இன்று நடந்த புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி காவல்துறைக்கு 2025-26 நிதியாண்டில் ரூ. 401.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதினைக் கடந்து திருமணம் ஆகாத, கணவரை இழந்த மற்றும் வேலையற்ற ஆதிதிராவிடர் பழங்குடியின மகளிருக்கு மாதம் ரூ. 3000 நிதி உதவி திருமணம், வேலைக்கு செல்லும் வரை வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

News March 12, 2025

புதுவை குடும்பத் தலைவி உதவித் தொகை ரூ.2500ஆக உயர்வு

image

புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் நடைபெற்று வரும் நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏராளாமன அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், புதுச்சேரியில் மகளிரின் நலன் கருதி குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500-ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

News March 12, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 : புதுவை முதல்வர்

image

புதுவை 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் “புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்”, என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

News March 12, 2025

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை

image

இன்று புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் “புதுச்சேரி மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 50 விழுக்காடு கொண்ட பசுக்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்”, என 2025 – 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

News March 12, 2025

புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வாஜ்பாய் பெயர்; முதல்வர்

image

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று “கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்படும், பத்துகண்ணு பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மதிய உணவு திட்டத்தில் முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்”, என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

News March 12, 2025

பள்ளிகளில் வாரம்தோறும் முட்டை வழங்கப்படும்; முதல்வர்

image

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று (மா.12) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை இனி வாரந்தோறும் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

News March 12, 2025

மழை கால நிவாரணம் ரூ. 2000 – புதுவை முதல்வர்

image

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில், “அனைத்து விவசாயிகளுக்கும் மழைகால நிவாரணம் ரூ.2000, வனம் மற்றும் வனமில்லாத பகுதிகளில் 3 லட்சம் மரக்கன்று நடப்படும். பள்ளிகளில் 1 லட்சம் மரக்கன்று வழங்க திட்டம். புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்” ,என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

News March 12, 2025

புதுச்சேரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை பல முன்னணி நிறுவனங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். பங்கு பெற்று பயன் பெறுவீர்..SHARE IT

error: Content is protected !!