Pondicherry

News March 13, 2025

திமுக – காங்கிரஸ் நாடகம் ஆடுவதாக அதிமுக குற்றச்சாட்டு

image

புதிய தேசிய கல்விக் கொள்கை சம்பந்தமான பிரச்சனைகள் திமுக- காங்கிரஸ் சட்டமன்றத்தில் நாடகமாடுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இதில் காங்கிரஸ் கட்சி கொள்கை முடிவு என்ன என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மீது உண்மையான பற்று இருந்தால் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என ஆட்சியாளர்களால் அறிவிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளார்.

News March 13, 2025

புதிய மதுபான ஆலைகள் மூலம் 5,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி சட்டசபையில் இன்று ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது. அதில் புதிய மதுபான ஆலைகள் மூலம் ரூ.500 கோடி வருவாய், 5,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2025ம் ஆண்டு ஐ.சி.சி., சாம்பியன்ஸ் வென்ற இந்தியாவை கொண்டாட பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., கிரிக்கெட் வாரியம் மூன்றும் மாதங்கள் இலவச ரீசார்ஜ் செய்வதாக கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள் உருவாக்கிய போலி லிங்கை சமூக வலைதளங்களில் பரப்பி, வருகின்றனர். இச்செய்தி முற்றிலும் பொய்யான செய்தி இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.

News March 13, 2025

ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது

image

திருக்கனூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி வந்ததையடுத்து அப்பெண் இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் சம்பந்தமாக இணையவழி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த இம்மானுவேல் ராஜேஷ் என்பவர் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார், கைது செய்தனர்.

News March 13, 2025

 ‘ஏ’ கிரேடு சான்றிதழ் பெற்ற புதுச்சேரி மின்துறை

image

புதுச்சேரி மாநில மின்துறை சிறப்பாக செயல்படுவதாகவும் மின் கட்டண வசூலை சரியாக செய்வதாகவும் புதுச்சேரி மின்துறைக்கு அதிக அளவு வருவாய் ஏற்படுத்தியதற்காக புதுச்சேரி மின்துறைக்கு மத்திய மின்துறை அமைச்சகம் ‘ஏ’ கிரேடு தரவரிசை சான்றிதழ் வழங்கி உள்ளது. இதற்கு நேற்று காரைக்கால் தலைமை மின்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

News March 13, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து பெண்களுக்கு அச்சுறுத்தப்படுகின்ற மாதிரி ஏதேனும் ஆபாச புகைப்படங்கள் வந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் செய்யுமாறும் அல்லது இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், அப்படி புகார் கொடுக்கும் பட்சதில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News March 13, 2025

மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்த முதல்வர்

image

புதுச்சேரி சட்டபேரவை 15 ஆவது சட்டபேரவையின் ஆறாவது கூட்டதொடர் கடந்த 10ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாள் நேற்று காலை 9.30 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி செய்த நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் கவர்னரக்கு பட்ஜெட் புத்தகத்தையும் முதல்வர் வழங்கினார்.

News March 12, 2025

புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்க கௌரவத் தலைவர் மரணம்

image

புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில தலைவருமான ரவி ஜான் இன்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடலுக்கு புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

News March 12, 2025

மாநில பட்ஜெட்டை அதிமுக வரவேற்கிறது – அன்பழகன்

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், இன்றைய பட்ஜெட் உரையின் மீது, “அரசு சார்பு நிறுவனங்களின் மூலதன சொத்துக்களை உருவாக்க 300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. பட்ஜெட், அரசின் நிதியுதவியை பெற்று பயன்பெறும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஒருசில குறைகள் இருந்தாலும் அதிமுக இந்த பட்ஜெட்டை வரவேற்கிறது” என்று தெரிவித்தார்.

News March 12, 2025

புதுச்சேரியில் பட்ஜெட் உதவாத காகிதப்பூ – எதிர்கட்சித் தலைவர்

image

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, “கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ள நிலையில், மணக்க மணக்க பட்ஜெட் உரை நிகழ்த்தி இருக்கிறார் முதல்வர். ஆனால் வெறும் காகிதப்பூவாக இருக்கிறது. புதுச்சேரியின் வருவாய், செலவினங்கள், கடன் வாங்க முடியாத நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள்‌” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!