India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் கௌதமன் என்பவருக்கு சொந்தமான தனியார் ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட பிரியாணியின் அளவு குறைவாக உள்ளதாக கூறி சண்டைபோட்டு, சமூக வலை தளங்களில் ஓட்டல் வாசலில் பிரியாணியை கொட்டி எடுத்த வீடியோவை அவதூறாக பரப்பி பிரச்சாரம் செய்த தினேஷ், சூர்யாதி , திருமுருகன் மீது ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 6 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று ஏற்கப்பட்டது. மேலும், வரும் 30 ஆம் தேதி வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் எனவும், 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது எனவும் புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக் குறிப்பில்:- தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்து சிபிஐ அதிகாரி என்றும் உங்களுடைய பெயரில் வந்துள்ள பார்சலில் போதை பொருட்கள் உள்ளது என்றும் உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்த வேண்டும் என்று மிரட்டுவார்கள். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளியின் செயல் எனவும் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரியில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 31-ந் தேதி மாலை புதுச்சேரியில் வில்லியனூர் கிழக்கு மாட வீதி, மரப்பாலம், அண்ணா சிலை சதுக்கம் ஆகிய மூன்று இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சாலையில் பறக்கும்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையை மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.7 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற வேண்டும் என என்ஆர் காங்கிரஸ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஓம் சக்தி ரமேஷ் மற்றும் உப்பளம் தொகுதி தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாதாள பேச்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்கள். புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி உட்பட 34 வேட்பாளர்கள் 45 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் தெரிவித்தார்.
உருளையன்பேட்டை சேர்ந்த அய்யூப் பெரியமார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடையை அபகரிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் மிரட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து நில அபகரிப்பு கும்பல் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என அத்தொகுதி எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து இன்று திடீரென பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பாராளுமன்ற தேர்தலின் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் ஆகும். எனவே புதுச்சேரியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜெயதாஸ். இவரது மகள் ஜெயலட்சுமி, புதுச்சேரி ஜிப்மரில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். நேற்று ஜெயலட்சுமி உள்ளிட்ட மாணவிகள் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் குளித்துள்ளனர். அப்போது அலையில் சிக்கி ஜெயலட்சுமி மாயமானார். தகவலறிந்த மீனவர்கள் ஜெயலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
Sorry, no posts matched your criteria.