Pondicherry

News March 14, 2025

புதுச்சேரியில் விடுபட்ட மாணவர்களுக்கு ‘லேப்டாப்’

image

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில் விடுபட்ட மாணவர்களுக்கும், 2025-26ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

News March 14, 2025

மாநில அந்தஸ்து குறித்து ஆளுநர் பேசுவார் – முதல்வர்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசியதில் “ஆளுநர் நாளை 15ஆம் தேதி குஜராத் செல்கிறார். பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார், நமது கோரிக்கைகளான மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, நிதி கமிஷனில் சேர்ப்பது ஆகியவைகள் குறித்து அவர் பேசுவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

புதுச்சேரியில் ‘ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம்’

image

காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறை கைதிகளின் அனைத்து தகவல்களும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். சிறை கைதிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நலனிற்காக ‘ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம்’ நடைமுறைப் படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் ஏழை கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

News March 14, 2025

புதுச்சேரி மின்துறையில் 73 காலிப்பணியிடங்கள்

image

புதுச்சேரி மின்துறையில் 73 இளநிலைபொறியாளர் பணியடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி வகுப்பு வாரியாக பொது-30, பிற்படுத்தப்பட்டோர்-8, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-13, மீனவர்-1, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) -1, ஆதிதிராவிடர்-12, பழங்குடியினர்-1, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்-7, மாற்றுத் திறனாளிகள்-3 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு.

News March 14, 2025

புதுவையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை பல முன்னணி நிறுவனங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். பங்கு பெற்று பயன் பெறுவீர்..SHARE IT

News March 14, 2025

எதிர்மறையான சிந்தனையோடு அதிகாரிகள் செயல்பட கூடாது

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உறுப்பினர்கள் நேற்று பேசினார்கள். இறுதியாக முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில் அரசு பல சங்கடங்களும் தடைகள் இருந்தாலும் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தும். அரசின் கோப்புகளை விரைந்து அனுப்ப வேண்டும். எதிர்மறையான சிந்தனையோடு அதிகாரிகள் செயல்பட கூடாது என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

News March 14, 2025

புதுச்சேரியில் மத்திய அமைச்சருக்கு  சிறப்பான வரவேற்பு

image

புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று வருகை தந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்-ஐ புதுச்சேரி மாநில எல்லையில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 13, 2025

புதுவையில் பத்ம ஸ்ரீ விருதாளர் பாராட்டு விழா

image

புதுச்சேரி மாநில அனைத்து பட்டியலின மக்கள் இயக்கம் சார்பில், பத்ம ஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் டாக்டர். தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், புதுவை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தவில் இசை வித்துவானுக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினர்‌.

News March 13, 2025

திமுக – காங்கிரஸ் நாடகம் ஆடுவதாக அதிமுக குற்றச்சாட்டு

image

புதிய தேசிய கல்விக் கொள்கை சம்பந்தமான பிரச்சனைகள் திமுக- காங்கிரஸ் சட்டமன்றத்தில் நாடகமாடுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இதில் காங்கிரஸ் கட்சி கொள்கை முடிவு என்ன என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மீது உண்மையான பற்று இருந்தால் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என ஆட்சியாளர்களால் அறிவிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளார்.

News March 13, 2025

புதிய மதுபான ஆலைகள் மூலம் 5,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி சட்டசபையில் இன்று ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது. அதில் புதிய மதுபான ஆலைகள் மூலம் ரூ.500 கோடி வருவாய், 5,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!