Pondicherry

News March 17, 2024

கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

image

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

News March 16, 2024

மீனவர் குடும்பத்திற்கு எம்.பி நேரில் சென்று ஆறுதல் கூறினார்

image

காரைக்கால் அடுத்த கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை ஒரே வாரத்தில் கைது செய்த நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பங்களை நேற்று இரவு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.

News March 16, 2024

மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் திறப்பு விழா

image

முதலியார் பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு இன்ஜினியர்ஸ் காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு அடுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான
மேம்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.

News March 16, 2024

புதுச்சேரி முன்னாள் முதல்வர் பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற சீட்டை ரூ.50 கோடிக்கு பேரம் பேசி விற்க முயற்சிக்கின்றனர். ஒரு அமைச்சர் தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்று வருவது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

News March 16, 2024

புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

image

புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாட திட்டம் அமுல் படுத்துவதால் மாணவர் சேர்க்கை வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தற்போது நடைபெறும் தேர்வுகள் முடிந்ததும், மார்ச்.24 முதல் 31 ஆம் தேதி வரையிலும், மே.01 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 03ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளது.

News March 16, 2024

புதுச்சேரியில் ஏப்ரல்.19ம் தேதி தேர்தல்

image

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு ஏப்.19ம் தேதி தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச்.20ம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ள ஆணையம், வேட்புமனு தாக்கல் நிறைவு மார்ச்.27 என்றும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி தேதி மார்ச்.30 என்றும் கூறியுள்ளது. வேட்புமனு பரிசீலனை மார்ச்.28ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜீன்.4ம் தேதியும் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2024

புதுச்சேரியில் மே 1 முதல் விடுமுறை

image

புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே 1 முதல் துவங்குகின்றது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரை மற்றும் மே.1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!