India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு வாக்குகளை செலுத்தினர். இதில் புதுச்சேரி முழுவதும் 78.80% வாக்குகள் பதிவான நிலையில் அதிகபட்சமாக பாகூர் தொகுதியில் 88.76% வாக்குகளும், குறைந்தபட்சமாக மாகி தொகுதியில் 65.11% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிங்கப்பூரில் மனைவி மாலதி, மகள் புவியரசி (18) மற்றும் மகன்களுடன் வசித்து வருகின்றார். இந்திய குடியுரிமை பெற்ற இவர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை உள்ளது. அதன்படி புதுவை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர். இவர்களில் புவியரசி முதல் முறை வாக்காளர் ஆவார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது. புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ஆளுங்கட்சியை சார்ந்த மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் மீறப்படுகிறது. இது சம்பந்தமான அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக கூறினார்.
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதுச்சேரி தொகுதி நாடாளுமன்றத் வாக்குப்பதிவு 3 மணி நிலவரப்படி காரைக்கால் வடக்கு தொகுதி 55.75 %, காரைக்கால் தெற்கு தொகுதி 54.39 %, திருநள்ளாறு தொகுதி 57.60 %, நிரவி திருப்பட்டினம் தொகுதி 57.06 %, நெடுங்காடு தொகுதி 62.38 % வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆக மொத்தம் காரைக்கால் மாவட்டத்தில் 3 மணி நேர நிலவரப்படி 57.43 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி லாசுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் அவரது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று வாக்களித்தார். இந்த நிலையில் முதல்வர் இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
புதுவை பாகூர் அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி ‘பிங்க் பூத்’ என்ற பெயரில் பெண் அதிகாரிகளை கொண்டு இயங்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த வாக்கு சாவடியின் நுழைவு வாயில் மற்றும் உள்ளே பிங்க் மற்றும் வெள்ளை நிற காகிதத்தால் ஆன தாமரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த பாகூர் இந்திய கம்யூ. கட்சி எதிர்ப்பு தெரிவித்து கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் துறையினர் அதனை அப்புறப்படுத்தினர்.
புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், “புதுச்சேரி அமைச்சராக இருந்து மக்கள் சேவையாற்றிய உங்களது சேவை என்றும் தொடரட்டும். புதுவையில் பாஜகவை மேலும் வலிமையானதாக்கும் வகையில் தாங்கள் செயல்படவேண்டும். மக்களவைத் தேர்தலில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற்று மக்களவைக்கு வருவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காரைக்காலில் புதுச்சேரி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவிருக்கின்ற நிலையில் வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. இதனை அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கு இயந்திரங்கள் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
புதுவை 100 அடி ரோடு ஜான்சி நகரில் முருகேசன் பைனான்சியர் என்பவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் இருந்த ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டு என ரூ.1 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் செல்லாத ரூ.2 ஆயிரம் நோட்டை ரூ. 1 கோடி அளவில் வைத்திருப்பது ஏன் என்றும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
புதுவை வாக்குச்சாவடி கண்காணிப்பு பணியில் 1,600 போலீசாரும், பாதுகாப்பு பணியில் 3,000 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை(ஏப்.19) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்கும் வரை அனுமதி அளிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.