Pondicherry

News April 27, 2024

புதுவை ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடை வகுப்புகள் துவக்கம்

image

புதுவை அரசு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஜவஹர் சிறுவர் இல்லத்தில் இலவச கோடை வகுப்புகள் மே 2 முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு, கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜவகர் சிறுவர் இல்லத்தில் குழந்தைகளுக்காக பல்வேறு கலைகளை கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் 0413 – 2225751 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்

News April 27, 2024

புதுவையில் ஷேக்ஸ்பியர் படைப்புகளின் கண்காட்சி

image

புதுவை வ.உ.சி. வீதியில் புதுவை அருங்காட்சியகத்தில் ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் ஷேக்ஸ்பியரின் துன்பியல் (டிராஜிடி ) நாடகங்களுக்கான படங்கள், அவரது வாழ்க்கை, கல்வி, திருமண வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியானது ஏப்ரல் 29 வரை நடைபெறுகிறது என்று அருங்காட்சியகம் ஆராய்ச்சி நூலக மேலாளா் மனோரஞ்சினி திருநாவுக்கரசு தெரிவித்தாா்

News April 27, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு

image

காரைக்காலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுற்ற நிலையில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று பாதுகாப்பு குறித்து அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டிவி கேமராவை பார்வையிட்டு பல்வேறு பாதுகாப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

News April 26, 2024

புதுவையில் கோடை விடுமுறை

image

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கோடை விடுமுறை தொடங்கி நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 29 ஆம் தேதி முதல் ஜுன் 5ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2024

புதுவையில் மதுக்கடைகள் இயங்க அனுமதி

image

புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இரவு 10 மணிவரை மட்டுமே இயக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டதால் மதுக்கடைகள் அனைத்தும் வழக்கம் போல் இரவு 11 மணி வரை செயல்பட புதுச்சேரி மாநில கலால் துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

News April 26, 2024

புதுவை நாகமுத்து மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்

image

புதுவையில் உள்ள கோவில்களில், சித்ரா பவுர்ணமியையொட்டி பல்வேறு வழிபாடுகள் நடந்தன. குறிப்பாக, அம்மன் கோவில்களில், பால் அபிேஷகம் சிறப்பான முறையில் நடந்தது. இதையொட்டி, சாரம், நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 108 பால் குடத்துடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன

News April 25, 2024

புதுச்சேரி சிறுமி கொலையில் திடுக்கிடும் தகவல்

image

முத்தியால்பேட்டையில் கடந்த மார்ச்.2ஆம் தேதி 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு இன்று கிடைத்துள்ளது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. மேலும், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 25, 2024

புதுவையின் மணக்குள விநாயகர் கோவில் சிறப்பம்சம்!!

image

புதுவை மத்தியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில், 1666 ஆம் ஆண்டுக்கும் முன்புள்ளது. இக்கோவிலின் கோபுரம் 7913 அடி உயரம் கொண்டது. தங்க ரதத்தில் அமர்ந்திருக்கும் விநாயகரும், தேக்கு மரத்தால் மட்டுமே செய்யப்பட்ட தேரும் பக்தர்கள் அளித்த நன்கொடையில் உருவாக்கப்பட்டது. இந்த தேரில் 7.5கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் தமிழ் கட்டடக்கலை பாணியில் வண்ணமயமாக இருப்பது சிறப்பானது.

News April 25, 2024

காரைக்காலுக்கு நாளை சிறப்பு மருத்துவர்கள் வருகை

image

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நாளை வருகை தந்து காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை அறுவை சிகிச்சை, இருதயவியல் சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்டவை சம்பந்தமாக சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க உள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 25, 2024

புதுச்சேரியில் இருந்து நாகர்கோவிலுக்கு புதிய பேருந்து

image

புதுவையில் இருந்து நாகர்கோவிலுக்கு புதிய Ultra Deluxe வகை இரண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை புதுவை அரசு போக்குவரத்து துறை அறிவித்தது. அதன்படி நேற்று 45 இருக்கைகளுடன் கூடிய இரண்டு புதிய PRTC சொகுசு பேருந்துகளுக்கு பூஜை போட்டு இயக்கப்பட்டன . இந்த பேருந்து புதுச்சேரியில் இருந்து மாலை 6. 25 மணிக்கு பேருந்து புறப்படும். கட்டணம் ரூ.640 வசூலிக்கப்படுகிறது.

error: Content is protected !!