India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் வாய்க்கால்பணியின் போது இன்று விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முதலியார்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இன்றி வேலை செய்துள்ளனர். இதனையடுத்து கான்ட்ரக்டர் , சூப்பர்வைசர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதிர்காமம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அறிமுக கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் இன்று நடந்தது. எம்எல்ஏ கேஎஸ்பி. ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது. புதுவையில் மக்கள் நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனால் தைரியமாக மக்களிடம் வாக்கு கேட்கலாம். மேலும் 80 முதல் 90 சதவித வாக்குகள் நமக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.
புதுச்சேரி, மரப்பாலம் வசந்த் நகரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல், ராஜேஷ்கண்ணா ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
புதுச்சேரி, மரப்பாலம் வசந்த் நகரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாய்க்கால் தூர்வாரும்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சிக்கிச் கொண்டனர். அதில் சம்பவயிடத்திலே ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தனர்.
மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம். இங்கு வைத்திலிங்கம்(காங்), நமச்சிவாயம்(பாஜக), தமிழ்வேந்தன்(அதிமுக) ஆகியோர் களம் காண்கின்றனர். இந்நிலையில், இத்தொகுதியில் 3 முனை போட்டி நிலவுவதால், யாருக்கு மகுடம் சூட்டும். இத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?
புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சி அமைத்தாலும் ஆளுநர் அனுமதி கொடுத்தால்தான் எதையும் செயல்படுத்த முடிகின்றது என்று தெரிவித்தார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பாஜக அமைச்சர் சாய் சரவணன் குமார், கடந்த 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 543 தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் உருவாக்குவார் என்று தெரிவித்தார்.
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் 19 சுயேட்சைகள் என 26 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வேட்பாளர் பட்டியலை புதுச்சேரி தேர்தல் நடந்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் இன்று அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தை இன்று (30-3-2024) மேற்கொண்டார். புதுச்சேரி உப்பளம் சாலை, புதிய துறைமுகம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொண்டு புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறினார்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் கிடந்த பார்சலில் இருந்து 5 செல்போன்கள், குட்கா, பீடி உள்ளிட்டவற்றை காவலர்கள் நேற்று கைப்பற்றினர். காலாப்பட்டு மத்திய சிறைக்கு பார்சல் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுச்சேரி மத்திய சிறைக்கு வீசப்பட்ட 5 செல்போன்கள், வைஃபை மோடம், பீடி, குட்கா பார்சலை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.