Pondicherry

News May 3, 2024

புதுவை பூங்காவில் புகைப்படங்கள் எடுக்க கட்டணம்

image

புதுவை கடற்கரை சாலை அருகே உள்ள பாரதி பூங்காவில் பல்வேறு தரப்பு மக்கள் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பூங்காவில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுக்க நகராட்சியில் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும் எனவும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் அப்போதுதான் அனுமதி வழங்கப்படும் என பூங்காவின் நுழைவு வாயில் முன்பு நகராட்சி சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

வெயிலால் நிழல் தேடும் பசு மாடுகள்

image

புதுவையில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் தொப்பி, கண்ணாடி போன்றவற்றை அணிந்து செல்கின்றனர். அந்த வகையில் கால்நடைகளும் அடிக்கிற வெயிலுக்கு இரை தேடாமல் நிழலை தேடி  பசு மாடுகள் அலைகின்றன.

News May 3, 2024

புதுச்சேரியில் 5000 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்

image

நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் 11 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு புதுச்சேரி தேர்வு மைய நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News May 3, 2024

அரியாங்குப்பத்தில் தேரோட்டம் முன்னிட்டு கொடியேற்றம்

image

அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள அருள் மிகு ஶ்ரீ செடிலாடும் செங்கழு நீர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் செங்கழுநீர் அம்மன் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். இந்நிகழ்வில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News May 2, 2024

எல்லை பாதுகாப்பு பணியின் போது காரைக்கால் வீரர் மரணம்

image

காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் இந்திய திபெத் எல்லைக் காவல் படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி இந்தியா – சீனா எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரேம்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். மரணம் அடைந்த பிரேம்குமார் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் திருப்பட்டினம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

News May 2, 2024

திருநள்ளாறு அருகே நாளை மின்தடை அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் நாளை (03-05-2024) திருநள்ளாறு உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த மின் பாதை மூலம் மின்சாரம் பெறும் அத்திப்படுகை பகுதி முழுவதும் நாளை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சுரக்குடி மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 2, 2024

புதுச்சேரிக்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் புதுச்சேரி, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9160322122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

News May 2, 2024

புதுவை: திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்

image

புதுச்சேரியில் உள்ள மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு அர்ஜுனன் திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்தில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News May 2, 2024

புதுவை: நடுரோட்டில் நிர்வாணம் – பரபரப்பு

image

புதுச்சேரி காந்தி வீதியில் நேற்று மாலை 5:00 மணிக்கு, 45 வயது மதிக்க தக்க நபர், உடலில் ஒட்டு துணி இன்றி நிர்வாணமாக நடந்து சென்றார். தொடர்ந்து அஜந்தா சிக்னல் நோக்கி வேகமாக ஓடியவர் திடீரென நேரு வீதி நோக்கி வேகமாக நடந்தார். சாலையில் சென்ற பெண்கள் அவரை கண்டு முகம் சுளித்தனர். தகவலறிந்து வந்த பெரியக்கடை போலீசார் அவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

புதுவை: இயக்குநரிடம் பாஜக எம்எல்ஏ மனு

image

புதுவையில் டெங்கு பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை இயக்குநரை சந்தித்து பாஜக எம்எல்ஏ அசோக்பாபு நேற்று மனு அளித்தார். அதில், டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு துறையின் மூலம் ட்ரோன் கருவியை பயன்படுத்தி, புதுவை மாநிலத்தில் வீடு, கழிவுநீர் வாய்க்கால் & நீர் நிலைகளில் தேங்கி உள்ள தண்ணீரில் தடுப்பு மருந்து தெளித்து டெங்கு இல்லாத புதுவையாக மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!